தேசியக் கொடி பற்றிய சில தகவல்கள்!

0
தேசியக் கொடியைக் காலை நேரங்களில் ஏற்ற வேண்டும்.தே சியக் கொடியை சூரிய உதயத்தின் பின் ஏற்றி சூரிய அஸ்தமனத்தின் போது இறக்கப்பட வேண்டும்.
தேசியக் கொடி தகவல்கள்
கொடியை இறக்கும் போது நிதானித்து மெதுவாக இறக்க வேண்டும். கொடி தரையில் படாமல் கைகளில் ஏந்தி எடுக்க வேண்டும்.

இரவு நேரங்களில் தேசியக் கொடியை ஏற்றுவதோ, பறக்க விடுவதோ தவறு. 

ஆனால் முறைப்படி அறிவிக்கப்பட்ட இரவுகளில் உதாரணமாக சுதந்திர தின பொன்விழா, வெள்ளி விழாவில் பறக்க விட அனுமதி உண்டு.

தேசியக் கொடியை ஊர்வலத்தில் எடுத்துச் செல்லும் போது முதல் வரிசையில் வலது புறத்தில் எடுத்துச் செல்ல வேண்டும்.
வேறு கொடிகள் முன் வரிசையில் இருந்தால் ஊர்வலத்தின் முன்னே நடுவில் எடுத்துச் செல்ல வேண்டும்.

செய்யக் கூடாதவை:

சாயம் போன தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது.

முக்கியஸ்தர் களுக்கு மரியாதை அளிப்பதாக கருதி தேசியக் கொடியை தாழ்த்தி பிடிக்கக்் கூடாது.

தேசியக் கொடியை அலங்கார பொருளாக மேடையிலோ. மேஜை மீதோ விரிக்கப்படக் கூடாது.

கொடியேற்ற விழா முடிகையில் ‘ஜனகன மன’ தேசிய கீதத்தைப் பாடத் தவறக் கூடாது.

தேசிய கீதம் பாடப்படும் போது கூடியுள்ளோர் பணிவுடன் அசையாது நிற்கத் தவறக் கூடாது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)