கடனை திருப்பி கேட்டவருக்கு கத்திகுத்து - இளைஞர் உயிரிழப்பு ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

கடனை திருப்பி கேட்டவருக்கு கத்திகுத்து - இளைஞர் உயிரிழப்பு !

Subscribe via Email

திண்டிவனத்தில் கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை நண்பர்கள் தாக்கிய தால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டிவனம் அடுத்த பெலாக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவா. இவர் டாட்டா ஏசி டிரைவராக உள்ளார். 
கடனை திருப்பி கேட்டவருக்கு கத்திகுத்து


இவரது நண்பர் திண்டிவனம் வசந்தபுரத்தைச் சேர்ந்த யுவராஜ்.

சிவாவிடம் கடந்த சில தினங்களு க்கு யுவராஜ் ரூ.2000 கடனாக பெற்றதாக கூறப்படுகிறது.

அதனை, சிவா திருப்பிக் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ள தாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் யுவராஜ் பணம் தருவதாக அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சிவாவை அழைத்ததாக கூறப்படுகிறது. 

அங்கு வந்த சிவாவை, யுவராஜ் தனது நண்பர்களுடன் கத்தி மற்றும் கைகளால் சரமாரியாக தாக்கியதாக கூறப் படுகிறது. 


இதில் நிலை குலைந்து மயங்கி கீழே விழுந்தவரை சிகிச்சைக் காக திண்டிவனம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிவாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினர்.

இதனை அடுத்து சிவாவின் உடல், உடல்கூறு ஆய்விற் காக பிரேத கிடங்கில் வைக்கப்பட்டது. 

இந்த கொலை சம்பந்தமாக சரத் என்கின்ற வெங்கடேசன், யுவராஜ், செல்வம் ஆகிய மூவரையும் திண்டிவனம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments

Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close