ஒரு லிட்டர் பாலை 81 மாணவர்களுக்கு கொடுத்த பள்ளி !





ஒரு லிட்டர் பாலை 81 மாணவர்களுக்கு கொடுத்த பள்ளி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
ஒரு லிட்டர் பாலை அதிக அளவு தண்ணீரில் கலந்து 81 அரசு பள்ளி மாணவர் களுக்குக் கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சை யாகியுள்ள தாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு செய்தி வெளியிட் டுள்ளது.
1 லிட்டர் பால் 81 பேருக்கு

கடந்த புதன் கிழமையன்று உத்தர பிரதேசத்தில் சோன்பாத்ரா மாவட்ட சலைய் பான்வா அரசு தொடக்கப் பள்ளியில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று மிக வைரலாக பகிரப்பட்டது.

பெரியதொரு அலுமினிய பாத்திரத்தில் அதிக அளவு தண்ணீரைச் சூடாக்கும் சமைக்கும் பெண்ணொருவர், 

அதில் ஒரு லிட்டர் பாலை கலந்து பாதி குவளை அளவு பாலை ஒவ்வொரு மாணவர்க ளுக்கும் வழங்குவது இந்த காணொளியில் தெரிகிறது,

மதிய உணவின்போது தண்ணீரில் பாலை கலந்து கொடுக்கும் இந்த காணொளி வைரலாக பரவிய பின்மா வட்ட அதிகாரிகள் இதற்குப் பொறுப்பான வர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அரசு ஆணையிட்டுள்ளபடி புதன்கிழமை மதிய உணவில் சோறும், பாலும் வழங்கப்பட மாணவர் களுக்கு வேண்டுமெனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

ஒவ்வொரு மாணவருக்கும் 150 மில்லி லிட்டர் பால் வழங்கப் பட்டிருக்க வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை க்குப் பின்னர் ஒப்பந்த அடிப்படை யில் நியமிக்கப் பட்டுள்ள ஷிக்ஷா மித்ரா ஆசிரியை மீது 

இந்தியக் குற்றவியல் பிரிவு 408-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளி யிட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)