24 முறை மதசார்பின்மை வார்த்தையை பயன்படுத்திய உச்சநீதிமன்றம் - அயோத்தி !

0
அயோத்தி நிலப்பிரச்சினை வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கும் போது, இரு மதப் பிரிவினர் நடுவே எந்த ஒரு உரசலும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் மிக மிக கவனம் செலுத்தி யுள்ளது.
மதசார்பின்மை வார்த்தையை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்


1045 பக்க தீர்ப்பில் 24 முறை மத சார்பின்மை என்ற வார்த்தையை உச்ச நீதிமன்றம் பயன்படுத்தி யுள்ளது இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

இந்து மற்றும் முஸ்லிம் ஆகிய இரு பெரும் சமூகத்தினர் நடுவே, நீண்ட நெடுங்கால மாக சர்ச்சை களுக்கு காரணமாக இருந்த ஒரு பிரச்சினை என்பதால் உச்ச நீதிமன்றம் இதை மிகவும் பொறுப்புணர் வுடன் ஜாக்கிரதை உணர்வுடன் கையாண்டுள்ளது.

மத நம்பிக்கை

தீர்ப்பில் ஒரு வரி இப்படி சொல்கிறது. மத நம்பிக்கை என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையாக வழங்கப் பட்டுள்ளது. 

அனைத்து மத நம்பிக்கை களுக்கும் சம மதிப்பு வழங்க வேண்டும் என்பது அதில் வலியுறுத்தப் பட்டுள்ளது. 

சகிப்புத் தன்மை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவை இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உரிய கடமையாக வரையறுக்கப் பட்டுள்ளது என்கிறது அந்த வரி.

தவறான செயல்கள்

தார்மீக ரீதியான, தவறான செயல்களால் நமது வரலாறு நிரம்பி யுள்ளது என்பதை மறுக்க முடியாது. இன்றும் கூட அது கருத்தியல் விவாதத்தைத் தூண்டுகிறது என்பதை மறுக்க முடியாது.

அடிப்படை
அயோத்தி


காலனி ஆதிக்கத்தி லிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, அனைத்து மத நம்பிக்கை யாளர்களு க்கும் சரி சம உரிமை வழங்கப்பட்டு, அவர்களின் மத வழிபாட்டில் மற்றவர்கள் தலையிட மாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கை வழங்கப்பட்டு வந்துள்ளது. 

மதசார்பின்மை மற்றும் அனைத்து மதங்களுக்கும் சம பாவனை என்பது அரசியல் சாசனத்தில் உறுதி செய்யப் பட்டுள்ள அடிப்படை அம்சம் என்கிறது என்று தீர்ப்பு.

அரசியலமைப்பு

அரசியலமைப்பு எப்போதும் மதிக்கப் படுவதையும் ஏற்றுக் கொள்வதையும் மீண்டும் வலியுறுத்து கிறோம். எல்லா மதங்களின் சமத்துவமும். மதச்சார்பின் மையும், இந்த நாட்டின் அடிப்படை. இவ்வாறு தீர்ப்பில் வரிகள் இடம் பெற்றுள்ளன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)