உலகெங்கும் நடக்கும் போராட்டங்கள், கிளர்ந்தெழுந்த மக்கள் !

0
உலகெங்கும் பல நாடுகளில் மக்கள் பல்வேறு காரணங்க ளுக்காக வீதிக்கு வந்து கடந்த இரண்டு வாரங்களாக போராடி வருகின்றனர். 
மக்கள் கிளர்ச்சி

இரானில் எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து போராடி வருகிறார்கள் மக்கள். மக்கள் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய 100 தலைவர்களை இரான் அரசாங்கம் கைது செய்துள்ளது. 

இது இரானின் நிலை என்றால், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

கொலம்பியா வில் வலதுசாரி அரசாங்கத் திற்கு எதிராக வெடித்த போராட்டத்தில், மூன்று பேர் வியாழக்கிழமை கொல்லப் பட்டனர். 

சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அரசு எடுத்த நடவடிக்கை களுக்கு எதிராக ஏறத்தாழ 2 லட்சம் மக்கள் வியாழக்கிழமை வீதியில் இறங்கி போராடினர்.

அது மட்டுமல்லாமல், ஊழலும் மலிந்து விட்டதாக மக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர். 
உலகெங்கும் நடக்கும் போராட்டம்

அது போல சிலியில் நடந்த போராட்டத்தில், அரசாங்கம் வேண்டு மென்றே மக்களை தாக்கியதாக அம்னெஸ்டி இன்டெர்நேஷனல் குற்றஞ்சாட்டி உள்ளது. 

அளவுக்கு அதிகமாக போலீஸ் பயன்படுத்தப் பட்டதில் ஐந்து பேர் கொல்லப் பட்டனர் என்றும், ஆயிரக் கணக்கான மக்கள் சித்திரவதை செய்யப்பட்டு தாக்கப் பட்டனர் என்றும், 

பாலியல் துன்புறுத் தலும் இருந்தது என அந்த அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)