மனச்சோர்வுக்கு உரிய நிவாரணம் - சிகிச்சை !

0
நீங்கள் உங்களுக்குப் பிடித்த தொலைக் காட்சித் தொடரை தினமும் தவறாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். 
மனச்சோர்வு


ஆனால் ஒரு கட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு மேலாக அந்த குறிப்பிட்ட தொலைக் காட்சித் தொடரை பார்க்க விருப்பம் இல்லாமல் இருந்தீர்கள் என்றால் 

நீங்கள் மனச்சோர்வு நோய்க்கு ஆளாகி யிருக்கிறீர்கள் என்கிறார்கள் மன நல மருத்துவர்கள்.

ஆச்சரியமாக இருக்கிறதா..!. ஆம். ஒருவர் சந்தோஷமான மனநிலையில் எவ்வளவு நேரம் வேண்டு மானாலும் இருக்கலாம். 

அதன் காரணமாக மன எழுச்சி என்பது ஏற்பட்டு, உடலுக்குள் மகிழ்ச்சிக்கான ஹோர்மோன்கள் சுரந்து உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். 

ஆனால் இதற்கு நேர் மாறாக துக்கத்தால் நீங்கள் ஆட்படுவீர்கள் என்றால், அந்தத் துக்கம் இரண்டு வாரத்துக்கு மேலாக உங்களிடம் நீடித்தால், நீங்கள் மனச்சோர்வுக்கு ஆளாகி இருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

இவர்கள் எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பார்கள். உடலளவில் சோர்வாகக் காணப்படு வார்கள். தனிமையை விரும்புவார்கள். 

அவர்களுடைய நாளாந்த நடைமுறை வாழ்க்கை பாதிக்கப் பட்டால் அவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதை உறுதிப் படுத்தலாம்.

அதே போல் மனச்சோர்வுக்கு ஆளாகி யிருப்பவர்கள் உறக்க மின்மையால் பாதிக்கப் படுவார்கள். சிலர் வழக்கம் போல் இரவில் உறங்கி, காலையில் ஏழு மணி அளவில் எழுந்திருக்கும் பழக்கம் கொண்டவர்கள், 
தாழ்வு மனப்பான்மை


இத்தகைய நோய் தாக்குவதற்கு பிறகு இரவு 3 மணி, 4 மணி, 5 மணி என்று எழுந்து நேரத்தைப் பார்த்து விட்டு மீண்டும் உறங்குவார்கள். 

இதனால் உறக்க மின்மையால் பாதிக்கப்படுவார்கள். சில மூன்று மணிக்கு எழுந்து விடுவார்கள்.

அதன் பிறகு அவருக்கு உறக்கமே வராது. இதுவும் மனச் சோர்வின் அறிகுறியே.

இவர்களுக்கு நம்பிக்கை யின்மை, தாழ்வு மனப்பான்மை, அடிக்கடி தற்கொலை எண்ணங்கள் கூட உருவாகக் கூடும். 

இந்த நிலை ஏற்பட்டால் மனச்சோர்வு நோய் தீவிரமாகிறது என்பதை உணர்ந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். 

தற்போது இதற்கான நவீன தெரபிகளும், சிகிச்சைகளும் அறிமுகமாகி பலனளித்து வருகின்றன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)