பைக்கை திருடும் வாலிபர்கள் - பீதியில் சென்னை ஓஎம்ஆர் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

பைக்கை திருடும் வாலிபர்கள் - பீதியில் சென்னை ஓஎம்ஆர் !

Subscribe via Email

சென்னை துரைப்பாக்க த்தில் ஆட்டோவில் வந்து இருசக்கர வாகனத்தை இரண்டு வாலிபர்கள் திருடி செல்லும் சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. 
சென்னை omr-ல் பைக் திருட்டு

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை துரைப்பாக்கம் குமரன் குடில் 6வது குறுக்கு தெருவில் உள்ள தனியார் குடியிருப்பில் இளைஞர்கள் பலர் வாடகைக்கு தங்கி வருகின்றனர். 

இந்த குடியிருப்பில் வசித்து வரும் ரஞ்சித் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 23ம் தேதி காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து அலுவலகத் திற்கு செல்வதற் காக கிளம்பிய ரஞ்சித் என்ற இளைஞர் குடியிருப்பின் கீழ் 

வளாகத்தில் நிறுத்தி யிருந்த தனது ஆர்.ஒன்.பை என்ற இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி யடைந்துள்ளார்.

உடுமலை அருகே பைக்குகள் பயங்கர மோதல்.. பெட்ரோல் டேங்க் வெடித்து இருவரும் கருகி சாவு

ஹெல்மெட் நபர்

பின்னர் எதிர் குடியிருப்பில் பாதுகாப்பிற்காக பொருத்தி யிருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது 
பீதியில் சென்னை ஓஎம்ஆர்

இளைஞர் ஒருவர் ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி யிருந்தது.

ஆட்டோ நபர்

கடந்த 22ம் தேதி நள்ளிரவு சரியாக 1:48 மணியளவில் இருசக்கர வாகனம் திருடு போன இடத்திற்கு ஒரு ஆட்டோவில் இரண்டு வாலிபர்கள் வந்துள்ளனர். 

ஆட்டோவில் இருந்து கையில் ஹெல்மெட்டுடன் இறங்கிய அந்த இளைஞர் சரியாக ஒரு மணி நேரத்தில் 

அதாவது 2:49 மணியளவில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி யிருந்தது.

இளைஞர் அதிர்ச்சி

குடியிருப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தை திருட வந்த நபர்கள் எடுத்து வந்த ஆட்டோவில் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்துள்ளது. 

தன்னுடைய இருசக்கர வாகனத்தை ஆட்டோவில் நபர்கள் திருடி செல்லும் காட்சியை பார்த்த பாதிக்கப்பட்ட ரஞ்சித் அருகில் உள்ள துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
பைக்கை திருடும் வாலிபர்கள்

புகாரை பெற்ற துரைப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் சிசிடிவி காட்சிகளை கைபற்றி இருசக்கர வாகனத்தை திருடி சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகனம் வந்தது

கடந்த 5ம் தேதி மாலை 5 மணியளவில் அதே பகுதியில் பட்டப்பகலில் ஒரு வீட்டினுள் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை 

இரண்டு வாலிபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சியை தொலை காட்சிகளில் ஒளிபரப்பிய தால் இருசக்கர வாகனத்தை திருடி சென்றவர்கள் இருசக்கர வாகனத்தை காரப்பாக்கம் பகுதியில் கொண்டு வந்து விட்டு சென்றனர். 

துரைப்பாக்கம் குமரன் குடில் பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி யுள்ளது.

No comments

Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close