முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சிகிச்சைக்காக லண்டன் செல்ல அனுமதி !

0
அண்டை நாடான பாக்.கின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 69 சிகிச்சை பெறுவதற் காக ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் நகருக்குச் செல்வதற்கு அந்த நாட்டு அரசு அனுமதி அளித்தது. 
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்


இதற்காக விமானத்தில் பயணிப்பதற்கு விதித்த தடையை நீக்க அரசு முடிவு செய்துள்ளது.

பாக்.கில் நீண்ட காலம் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. 

ஊழல் வழக்கில் அவர் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார்.

இந்த நிலையில் உடல் நிலை மோசமானதால் அவர் லாகூரில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டிருந்தார். 

அவருடைய உடல்நிலை மிகவும் மோசமான தால் லண்டனில் சிகிச்சை பெறுவதற்கு முடிவு செய்யப் பட்டது. மருத்துவர் களும் இதற்கு பரிந்துரை செய்திருந்தனர்.

இந்நிலையில் ஊழல் வழக்குகளில் விசாரணை நடைபெற்று வந்ததால் விமானத்தில் பறப்பதற்கு தடை விதித்து அந்த நாட்டு அரசு உத்தர விட்டிருந்தது. 

அது விலக்கி கொள்ளப் படாததால் லண்டனுக்கு செல்வதில் ஷெரீபுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதை யடுத்து அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா மகமூத் குரேஷி கூறிய தாவது:


ஷெரீப்பின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு விமானத்தில் பறப்பதற்கு அவருக்கு விதிக்கப் பட்டிருந்த தடை உத்தரவு விலக்கி கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது. 

தேசிய பொறுப் புடைமை நீதி மன்றத்தின் ஒப்புதல் பெறுவதற்கு கால தாமதமான தால் இந்த தடை உடனடியாக விலக்கி கொள்ள முடிய வில்லை. 

அவர் உடல் நிலை தேறுவத ற்காக பிரார்த்திக் கிறோம்.இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக நேற்று காலையில் லண்டன் செல்ல திட்டமிடப் பட்டிருந்தது. 

தடை விலக்கி கொள்ளப் படுவதால் அடுத்த சில நாட்களில் ஷெரீப் லண்டனுக்குப் புறப்படுவார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)