ரோபோ தயாரிக்க Model முகம் கொடுப்பவருக்கு ரூ. 91 லட்சம் !

0
ரோபோ தயாரிக்கும் நிறுவனம் ஒன்று சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று சமூக வலை தளங்களில் பேசுபொருளாகி யுள்ளது.
ரோபோ தயாரிக்க Model முகம்


லண்டனை சேர்ந்த Geomiq.com என்ற இணைய தளத்தில் புதிதாக தொடங்கப் பட்டுள்ள ரோபோ தயாரிப்பு நிறுவனம் ஒன்று, விளம்பரம் ஒன்றை வெளி யிட்டிருந்தது. 

அதில், முதியவர் களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் தங்கள் நிறுவனம் ரோபோக் களை தயாரிக்க இருப்பதாகவும் 

அதற்காக அமைதியான முகத் தோற்றம் உடையவர் களின் முகத்தை Model-ஆக பயன்படுத்தப் போவதாகவும் அறிவிக்கப் பட்டிருந்தது.

அதுமட்டுமல்லாமல் அவ்வாறு Model-ஆக பயன் படுத்தப்படு பவர்களுக்கு 1 லட்சம் பவுண்ட் ( இந்திய மதிப்பில் 91 லட்சம்) வழங்கப்படும் எனவும் அறிவித்திருக் கிறது. 


ஒப்பந்தங்கள் இன்னும் முழுமையடை யாததால், நிறுவனத்தின் பெயர் உள்ளிட்ட தகவல்களை Geomiq.com இணையதளம் குறிப்பிட வில்லை. 

எனினும் இந்த அறிவிப்பை பார்த்த இணைய தளவாசிகள், ஹாங் காங்-ஐ சேர்ந்த நிறுவனம் தயாரித்த Sophia என்ற ரோபோவின் முகத்தை போலவே

இந்த நிறுவனமும் ரோபோக்களை தயாரிக்கலாம் என யோசனைகள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், சமூக வலை தளவாசிகள் பலர், அந்த விளம்பரத்திற்கு ஆதரவாகவும், கிண்டல் செய்யும் வகையிலும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

ரோபோ உருவாக்கு வதற்காக முகத்தை Model-ஆக கேட்பது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)