மசூதிக்கு இடம் அளிக்க முஸ்லிம் வாரியம் விரைவில் முடிவு !

0
அயோத்தியில் மசூதி கட்டுவதற் கான இடத்தை பெறுவது தொடர்பாக விரைவில் நடக்க உள்ள வக்பு வாரிய கூட்டத்தில் முடிவு செய்வோம் என சன்னி வக்பு வாரிய தலைவர் ஜுபர் பரூகி தெரிவித்தார்.
மசூதிக்கு இடம்


அயோத்தி வழக்கில் சர்ச்சையில் இருந்து வந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

இதை யடுத்து முஸ்லிம்கள் மசூதி கட்ட அயோத்தியில் 5 ஏக்கர் மாற்று இடம் வழங்கப்படும் என்றும் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், சன்னி வக்பு வாரிய தலைவர் ஜுபர் பரூகி அளித்த பேட்டியில்:

'உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளபடி 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்று வரும் நவ. 26ம் தேதி நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். 


உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மதிக்கிறோம். பலரும் உச்சநீதிமன்ற தீர்ப்பினை ஏற்க கூடாது என்று தெரிவித்து வருகின்றனர். 

தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் எண்ணம் இல்லை.

எதிர் மறையான எண்ணங் களை நேர் மறையான எண்ணங்கள் வெல்லும்' இவ்வாறு பரூகி தெரிவித்தார்

முன்னதாக கூட்டம் நவ.13 ம் தேதி நடைபெற இருந்த நிலையில் அது தற்போது 26ம் தேதி ஒத்தி வைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)