செரிமானம் - சமிபாடு எப்படி ஏற்படுகிறது?





செரிமானம் - சமிபாடு எப்படி ஏற்படுகிறது?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
முதற்கட்ட மான செரிமானம், நம் வாயில் போடும் உணவு நன்கு மெல்லப் பட்டு உமிழ்நீருடன் கலந்து கிரியை புரியும் போது ஆரம்பமா கிறது. 
செரிமானம் எப்படி ஏற்படுகிறது?

பின்பு அவ் உணவானது வயிற்று க்குள் (இரைப்பை க்கு) தள்ளப் படுகிறது.

உணவை நன்கு மெல்லாமல் வழங்குபவர் களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும். 

வயிற்றி லுள்ள உணவு, அங்குள்ள அமிலங் களுடன் நன்கு கடையப்பட்டு, அங்கு சுரக்கும் சுரப்பி ளினால் மாற்ற மடைந்து சிறு குடலுக்குச் செல்கிறது. 

வயிற்றி லுள்ள அமிலத் தன்மை அதிகமாகும் போது, நமக்கு அசிடிடி அல்லது நெஞ்செரிச்சல் உண்டாகிறது. செரிமானம் பாதிக்கப் படுகிறது.

சிறுகுடலுக்கு வந்த உணவு, அமிலத் தன்மை யுடையது.

கணையத்தி லிருந்து கணைய நீர், கல்லீரலில் இருந்து பித்தநீர் இவை காரத்தன்மை யுடையன. 

இவற்றுடன் சிறுகுடலில் சுரக்கும் பல என்ஸைம் களுடன் கலந்து, உணவு அமிலத் தன்மை இழந்து, நடுநிலை அடைகிறது. 

இங்கு உணவின் சத்துக்கள் உட்கிரகிக் கப்பட்டு சக்கைகள் பெருங்குடல் க்குள் தள்ளப் படுகின்றன. பெருங்குடலில் இக்கழிவுக ளில் உள்ள நீர் உறிஞ்சப்பட்டு மலமாக வெளியேறுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)