காய்சலுக்காக சென்ற இளைஞருக்கு உடலில் உடைந்த ஊசியை மறைத்த மருத்துவமனை ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

காய்சலுக்காக சென்ற இளைஞருக்கு உடலில் உடைந்த ஊசியை மறைத்த மருத்துவமனை !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
சென்னையில் காய்சலுக் காக சென்ற இளைஞருக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை, அவரது உடலில் ஊசி உடைந்து தங்கியதை மறைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
உடலில் உடைந்த ஊசி


தற்போது அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் இளைஞரின் உடலலிருந்த ஊசியை அகற்றிய நிலையில்,

அலட்சியமாக செயல்பட்ட தாக அந்த தனியார் மருத்துவமனை மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

சென்னை மாதவரத்தைச் சேர்ந்த தேவசகாயம் - மேரி தம்பதியின் 20 வயது மகன் ஜான். கடந்த மாதம் 23-ந் தேதி காய்ச்சல் காரணமாக அதே பகுதியில் உள்ள கே.எம்.மருத்துவ மனைக்கு சென்றுள்ளார். 

அங்கு மருத்துவர் முருகு என்பவர், ஜானை பரிசோதித்து ஊசி போட்டுக் கொள்ள அறிவுறித்தியதின் படி, மருத்துவமனை செவிலியர் ஒருவர் ஜானின் இடுப்பில் ஊசிப் போட்டுள்ளார்.

பிறகு வீட்டிற்கு வந்த ஜானி-ற்கு காய்ச்சல் குறைந்தாலும், ஊசிப் போட்ட இடத்தில் வலி குறைய வில்லை. 

இரண்டு நாட்களான பிறகும் ஊசிப் போட்ட இடத்தில் வலி அதிகமாக இருந்ததால், மீண்டும் அதே மருத்துவ மனைக்கு சென்று மருத்துவர் முருகுவிடம் கூறிய போது ஐஸ் கட்டி வைத்தால் சரியாகி விடும் என திருப்பி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.


ஒரு வார காலமாக வலியால் அவதியுற்ற ஜானை கடந்த 2-ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனை அழைத்து வந்து எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது,

அவரின் இடுப்புக்கு கீழ் பகுதியல் உடலில் ஊசி இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி யடைந்தனர்.

ஊசி உடைந்து உடலின் உள்ளேயே தங்கி செப்டிக் ஆகியிருப்பதால் உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கூறிய அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி யுள்ளனர்.

அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

உடலில் ஊசி இருந்ததற் கான எக்ஸ்ரே நகல், அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த விவரம், கே.எம். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றதற்கான ஆதாரங் களுடன் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

COMMENTS

.ME
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close