மனித முகத்துடன் நீந்தும் மெகா சைஸ் மீன் !

0
பொதுவாக மீனின் முகத்தை மாற்றி அதை வேறு வடிவங்களில் காட்டும் நடைமுறையை ஹாலிவுட் ஹாரர் படங்களில் பார்த்திருக் கலாம். 
மனித முகத்துடன் நீந்தும் மீன்


ஆனால் அதை போன்று மீன் ஒன்று மனித முகச் சாயலில் இருப்பதை போன்ற வீடியோ சமூக வலைத் தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த மீன் நீரில் நீந்தும் போது தற்செயலாக படம் பிடிக்கப் பட்டுள்ளது.

இந்த மீனை சீனாவில் உள்ள மியாவோ கிராமத்தில் ஒரு பெண் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அதனை மைக்ரோ ப்ளாக்கிங் வலைத் தளத்தில் பகிர்ந்துள்ளார். 

அவர் பதிவு செய்துள்ள வீடியோவில் மீனின் முகம் மனிதச் சாயலில் தென்படுகிறது. இதை போன்ற உருவத்தில் மீன் உள்ளது வழக்கமானதல்ல என்று தெரிய வந்துள்ளது. 

ஆகவே இதனைக் கண்ட நெட்டிசன்கள் வேகமாக இதனை பரப்ப தொடங்கி விட்டனர்.

மொத்தம் 14 செகண்ட் மட்டுமே ஓடக்கூடிய வீடியோவில் தென்படும் மீனின் முகம் மனித முகத்தில் இருப்பதைக் கண்டு ஆச்சரியமாக கருத்திட் டுள்ளனர். குறிப்பாக அதன் முகம் மற்றும் வாய், கண்கள் மனித சாயலில் உள்ளன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)