அருமை.... என்ஜின் இல்லா வண்டிக்கு அபராதம் !

0
கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு அருகே என்ஜின் இல்லாத மோட்டார் சைக்கிளை உருட்டி வந்த இளைஞரை மறித்து ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்ததாக போலீசார் அபராதம் விதித்த கூத்து அரங்கேறி உள்ளது
என்ஜின் இல்லா வண்டி


சினிமா காமெடி காட்சி போல ஒரு சம்பவம் கடலூர் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. 

சிதம்பரம் அடுத்த சேத்தியாதோப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சக்திவேல் என்பவர் தான்

என்ஜின் இல்லாத வண்டியை உருட்டி வந்தவரை மறித்து அபராதம் விதித்த ஸ்ட்ரிக்டான போலீஸ் அதிகாரி..!

இரு சக்கர வாகனத்தில் என்ஜின் இருந்தால் மட்டுமே, மோட்டார் வாகன சட்டம் பொருந்தும் என்ற நிலையில் மோட்டாரே இல்லாத வண்டிக்கு 

எந்த அடிப்படையில் அபராதம் வசூலித்தனர் என்ற கேள்விக்கே போலீசாரிடம் பதில் இல்லாத நிலையில், அபராதத்தை கட்டி விட்டு கம்யூட்டர் பில் கேட்டால் மட்டும் கொடுத்து விடுவார்களா என்ன ?


தனக்கு நியாயம் கிடைக்கும் என்று ஏட்டையா விடம் முறையிட சென்ற இந்த இளைஞரோ, நிற்காமல் சென்ற பல்சர் வண்டி காரருக்கு,

ஏட்டையா பிறப்பித்த அதிரடி அபராத தாக்குதல் போலீசார் வாகன சோதனையின் மறுபக்கத்தை காட்டுவ தாக இருந்தது

இது தொடர்பாக சேத்தியா தோப்பு காவல் ஆய்வாளர் ராமதாசிடம் பேசிய போது, உயர் அதிகாரி களின் உத்தர வில்லாமல் இந்த சம்பவம் தொடர்பாக மீடியாக்களுக்கு விளக்கம் அளிக்க இயலாது என்றார்

இந்த நிலையில் என்ஜின் இல்லா வண்டியை மறித்து அபராதம் விதித்துள்ள காவல் துறையினர் 

இனி வண்டி சாவியை வைத்துக் கொண்டு நடந்து சென்றாலும் ஹெல்மெட் போட வில்லை என்று அபராதம் விதிப்பார்களோ ? என்று வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)