ஒரு டாக்டரின் டைரி குறிப்பு - வாஸ்குலர் !

0
கார்த்திக்கு நடுத்தர வயது தான்; பெரிய நிறுவன மொன்றின் விளம்பர பிரிவில் வேலை. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்; மூத்தவள் 6ம் வகுப்பு படிக்கிறாள்.
ஒரு டாக்டரின் டைரி குறிப்பு


இளையவள் 2ம் வகுப்பு படிக்கிறாள். குழந்தை களை வார இறுதி நாட்களில், பூங்காவிற்கு அழைத்துச் செல்வது கார்த்தியின் வழக்கம்.

அப்போது, குழந்தை களை ஊஞ்சல் ஆட்டி விட நிற்கும் சமயத்தில், காலில் வலியை உணர்ந்தார்.

திடீரென்று, சில நாட்களாக, வலது காலை ஊன்றி நிற்க கூட முடியவில்லை; ஏன் என்றும் தெரிய வில்லை.

ஆனால், காலில் திராட்சை கொத்து போல், நரம்பு முடிச்சுகள் காணப்பட்டன. அதன் பின் தான் நடக்க முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில், என்னை சந்திக்க வந்திருந்தார்.

சில பரிசோதனைகள் செய்த பின், பிரச்னையை கண்டறிந்து விட்டோம். கார்த்திக்கு இருப்பது, 'வெரிகோஸ் வெயின்!' காலிலுள்ள நரம்புகள் புடைப் படைவதே, 'வெரிகோஸ் வெயின்' என்றழைக்கப் படுகிறது.

வெரிகோஸ் வெயின் பிரச்னை வந்தால், காலில் அரிப்பு, கால் வலி, வீக்கம் போன்றவை ஏற்படும். 

கணுக்காலின் உள் பகுதியில் புண் ஏற்படும். அந்தப் பகுதி, கறுப்பாக மாறிவிடும். இதைக் கண்டறிந்து குணப்ப டுத்துவது மிகவும் எளிது. 

'வாஸ்குலர்' அறுவை சிகிச்சை நிபுணரை அணுகினால், 'டாப்ளர்' என்ற கருவியைப் பயன்படுத்தி, கால் ரத்தக் குழாயில் பாதிப்பு ஏற்படுவதைக் கண்டறிவர். 


ஆரம்ப நிலை என்றால், மருந்து, மாத்திரை, 'ஸ்டாக்கிங்' என்ற சாக்ஸ் அணிவதன் மூலம் குணப்படுத்த முடியும்.

சில ஆண்டுகளு க்கு முன் வரை, வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கு, திறந்த முறையில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. 

தற்போது, 'ரேடியோ ப்ரீக்குவன்ஸி அபலேஷன், லேசர்' என, நவீன சிகிச்சைகள் வந்து விட்டன.

இதில், சிறு துளையிட்டு, ரத்தக் குழாயில் ஒயர் போன்ற அமைப்பைச் செலுத்தி, ரேடியோ ப்ரீக்குவன்ஸியை, பாதிக்கப்பட்ட குழாயை ஒட்டி விடுவோம். 

அசுத்த ரத்தமானது தசைகளு க்கு உள்ளாகச் செல்லும், மற்றொரு குழாய் வழியே மேலே செல்லும். இந்த அறுவை சிகிச்சை, குறுகிய நேரத்தில் செய்யப் படுகிறது. 

சிகிச்சை முடிந்து இரண்டே நாட்களில், வேலைக்குச் செல்லலாம்! வெரிகோஸ் வெயின் பாதிப்பு, பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படுகிறது. 


ஹார்மோன் சீரற்ற நிலையிலும், இரண்டு குழந்தை களுக்கு மேல் குழந்தை பெற்ற பெண்களு க்கும் ஏற்படுகிறது. 

இதோடு ஆசிரியர், சாலை பாதுகாப்பு, காவல் துறை போன்ற பணியில் இருப்பவர்கள், கடைகளில் நிறைய நேரம் நின்று வேலை பார்ப்பவர்கள், 

காலில் ரத்தக் கட்டு இருப்பவர்கள் போன்றோரு க்கு, ரத்த நாளங்களி லுள்ள வால்வுகள் பாதிப்படைந்து, வெரிகோஸ் வெயின் பாதிப்பு ஏற்படுகிறது. 

கார்த்திக்கு மேலே கூறப்பட்டது போல், 'ரேடியோ ப்ரீக்குவன்ஸி அபலேஷன்' சிகிச்சையின் மூலம், அவரின் பிரச்னை சரி செய்யப் பட்டது.

- தி.கபில் பாலிகா
ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர்
புதுச்சேரி73732 02111
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)