பேட்டிங் செய்ய ரூ20 லட்சம் - கிரிக்கெட் வீரர்கள் கைது !

0
மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட தாக கர்நாடகாவைச் சேர்ந்த 2 கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், பிரிமீயர் லீக் டி-20 போட்டிகள் நடந்து வருகிறன. 
பேட்டிங் செய்ய ரூ20 லட்சம்


இதே போல கர்நாடகா விலும் நடந்து வருகிறது. இந்தாண்டுக் கானப் போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது.

இதில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக சில கர்நாடக வீரர்கள் மீது புகார் எழுந்தது. 

இதை விசாரித்து வந்த கிரைம் பிரிவு போலீசார், ஜி.எம்.கவுதம், அப்ரார் காஸி ஆகிய கிரிக்கெட் வீரர்களை இன்று காலை கைது செய்துள்ளனர். 

கவுதம், பெல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார். அப்ரார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்.

இவர்கள் கைது செய்யப் பட்டதை உறுதி செய்துள்ள கூடுதல் கமிஷனர் சந்தீப் பட்டீல், தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் மேலும் சிலர் கைது செய்யப் படலாம் என்றும் தெரிவித்தார்.

கர்நாடக பிரிமீயர் லீக் இறுதிப் போட்டியில் பெல்லாரி - ஹுப்பாலி அணிகள் மோதின. 


இதில் மெதுவாக பேட்டிங் செய்வதற் காக 20 லட்சம் ரூபாயை இவர்கள் பெற்றதா கவும்

மற்றொரு போட்டியின் முடிவை முன்பே தீர்மானிக்க பணம் பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இந்த புகார் தொடர்பாக ஏற்கனவே நிஷாந்த் சிங் செகாவத் என்பவர் கைது செய்யப் பட்டதை அடுத்து மேலும் இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

ரஞ்சி வீரர்களான கவுதமும் அப்ராரும் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர். கவுதம் பெங்களூர், மும்பை இண்டியன்ஸ், டெல்லி அணிகளில் விளையாடி இருக்கிறார். 

மேட்ச் பிக்சிங் புகாரில் இரு கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப் பட்டிருப்பது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)