சீனாவை விட காற்று மாசு மோசமானது இருக்க காரணம்?

0
டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் விவசாய கழிவுப் பொருட்களை எரிப்பதால் ஏற்படும் கரும்புகையால் டெல்லியில் காற்று மாசு ஏற்படுகிறது. 
சீனாவை விட காற்று மாசு


வாகனங்களா லும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்காக ஒற்றை, இரட்டை இலக்க பதிவெண் கொண்ட வாகனங்களை இயக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

டெல்லியில் காற்று தர குறியீடு 500-க்கும் மேல் உள்ளது. இது மித அளவை விட 5 மடங்கு அதிகம்.

தீபாவளி பண்டிகைக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை காற்று மாசு அபாய அளவை எட்டியது. இதன் காரணமாக நேற்று வரை டெல்லியில் உள்ள பள்ளிகளு க்கு விடுமுறை அளிக்கப் பட்டது. 

கட்டுமான பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இது போல் ஆசியா முழுவதும் உள்ள நகரங்களில் காற்றின் தரம் எப்படி உள்ளது என கீழே பார்ப்போம்.

பெய்ஜிங் நீண்ட காலமாக அதன் புகைமூட்டம் போல் சூழந்த காற்று மாசால் பாதிக்கப்பட்டு வருகிறது. 

ஆனால் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளின் நகரங்கள் மோசமான காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளன என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
காற்று தர குறியீடு


சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஐ.க்யூ ஏர்விஷுவல், உலகளவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்யும் குழு மற்றும் கிரீன்பீஸ் ஆகிய வற்றின் ஆய்வின்படி உலகின் மிக மாசுபட்ட காற்று உள்ள 30 நகரங்களில் 22 இந்தியாவில் உள்ளன என கூறி உள்ளது.

உலகின் மிகவும் மாசுபட்ட தலை நகரங்கள் சராசரி ஆண்டு பிஎம் 2.5 ஆல் வரிசைப் படுத்தப் பட்டுள்ளது. ஒட்டு மொத்த நாடுகளைப் பார்க்கும் போது, வங்கதேசமே மிக மோசமான காற்றைக் கொண்டுள்ளது, 

அதைத் தொடர்ந்து பாகிஸ்தானும் பின்னர் இந்தியாவும் உள்ளன. இந்த தரவரிசை அனைத்தும் ஆண்டுக்கு சராசரி காற்றின் தரத்தை அடிப்படை யாகக் கொண்டவை ஆகும்.

நகர்ப்புறங் களில் மாசுபாடு பொதுவாக வெவ்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. பெரும்பாலும் போக்கு வரத்து, எரிபொருள் எரியும் மின் நிலையங்கள் மற்றும் கனரக தொழில்கள் ஆகும்.
மாசுபட்ட தலை நகரங்கள்


இந்தியாவில் இருந்து சீனாவை வேறு படுத்துவது என்ன வென்றால், விவசாயிகள் தங்கள் வயல்களை இலையுதிர் காலத்தில் அழிக்க விரும்பும் போது விவசாய வயல்களில் வைக்கோல் களை எரிப்பது பொதுவாக நடைபெறுகிறது. 

இதனால் காற்றில் அதிக மாசு கலக்கிறது. இந்த காற்று மாசு என்பது உண்மையில் விவசாயிகள் வயல்களை எரிப்பதால் ஏற்படுகிறது என்று 

தெரிகிறது என்று லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் உதவி பேராசிரியர் தாமஸ் ஸ்மித் பிபிசியிடம் தெரிவித் துள்ளார். ஆனால் சீனாவில் விவசாயிகள் வயல்களை எரிப்பது தடை செய்யப்பட்டு உள்ளது.

காற்று மாசு பெரும்பாலும் கார்கள் மற்றும் கனரக தொழில்களை மட்டுமே காரணங்க ளாக கூறினாலும் விவசாய நிலங்களை எரிப்பதும் முக்கியமாகும்.

டெல்லியில் காற்றி மாசு அதிகரித்ததை அடுத்து, டெல்லியைச் சுற்றியுள்ள மாநிலங்களில் வயல்களை எரிப்பதை நிறுத்த சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டது.

மாசு அளவுகள் காற்றில் உள்ள ஆபத்தான துகள்களின் அளவை அளவிடுவதன் மூலம் வகைப் படுத்தப் படுகின்றன. இதன் விளைவாக நல்லது முதல் அபாயகரமானதாக வகைப் படுத்தப் படுகிறது.
டெல்லியில் காற்றி மாசு


மாசு காற்றின் தாக்கம் ஒவ்வொரு நபருக்கும் வேறுபட்டது என்று நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் டாக்டர் கிறிஸ்டின் கோவி விளக்குகிறார்.

"சிலர் கண்களுக்கு எரிச்சல், தொண்டை, மூச்சுத் திணறல் மற்றும் ஆஸ்துமா அறிகுறிகள் இருப்பதாக சிலர் புகார் கூறுகிறார்கள். 

ஆஸ்துமா இல்லாதவர் களுக்கு கூட இருமல் நிச்சயமாக இருக்கும் இது மிகவும் பொதுவான அறிகுறி யாகும். இதில் நிச்சயமாக வயதானவர்கள் தான் பாதிக்கப் படுகிறார்கள். 

மிகவும் இளம் வயதினர்கள் சுவாச நோய்கள் அல்லது இதய பிரச்சினை உள்ளவர்கள் பாதிக்கப் படுகிறார்கள்.

ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் மாசு அளவு கடந்த சில நாட்களில் இந்தியா அனுபவித்த அளவை விட கணிசமாகக் குறைவாக உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)