பாகிஸ்தான் அருங்காட்சியத்தில் அபிநந்தன் உருவ பொம்மை !

0
பாகிஸ்தான் விமானப்படை அருங்காட்சிய கத்தில், இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் சிறை பிடிக்கப் பட்டது போன்ற உருவ பொம்மையை, பாக்., அரசு வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. 
 அபிநந்தன் உருவ பொம்மை


பாகிஸ்தானின் அட்டூழியம் எல்லை மீறியுள்ள தற்கு, பல தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நம் விமானப் படையின், 'விங் கமாண்டர்' அபிநந்தன், பிப்ரவரியில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்து வதற்காக, 'மிக் - 22' ரக விமானத்தில் சென்றார். 

எதிர்பாராத விதமாக இவரது விமானம் தாக்குதலுக்கு ஆளானது. அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவம் வசம் சிக்கினார். 

இரு தரப்பு பேச்சு மற்றும் சர்வதேச நாடுகளின் தலையீட்டின் அடிப்படையில், 54 மணி நேரத்துக்கு பின், நம் ராணுவத்திடம், அபிநந்தனை, பாக்., அரசு ஒப்படைத்தது.


இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகை யாளரும், அரசியல் விமர்சகரு மான அன்வர் லோதி, தன், 'டுவிட்டர்' பக்கத்தில், ஒரு புகைப்படத்தை வெளியிட் டுள்ளார். 

அதில், அபிநந்தன் இந்திய விமானப் படை சீருடையுடன் நிற்பது போலவும், அவரை, பாக்., ராணுவ வீரர் ஒருவர் சிறை பிடித்திருப்பது போலவும், இரண்டு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. 

இந்த புகைப்படத்தை வெளியிட்டு, அன்வர் லோதி கூறியுள்ளதாவது: 

கராச்சியில் உள்ள பாக்., விமானப் படை அருங்காட்சி யகத்தில், அபிநந்தன் சிறை பிடிக்கப் பட்டது போன்ற உருவ பொம்மை வைக்கப் பட்டுள்ளது; இது, பார்ப்பதற்கு நன்றாக உள்ளது.


ஆனால், அவர், 'டீ' குடிப்பது போன்ற பொம்மையை வைத்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார். 

அபிநந்தன், பாக்., ராணுவம் வசம் இருந்த போது, அவர், டீ சாப்பிடுவது போலவும், அவரிடம் பாக்., ராணுவத்தினர் கேள்விகள் கேட்பது போலவும், ஒரு, 'வீடியோ'வை, பாகிஸ்தான் வெளி யிட்டிருந்தது. 

இதை குறிப்பிட்டு கிண்டலடிக்கும் வகையில் தான், லோதி, அந்த கருத்தை பதிவிட்டுள்ள தாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே, பாகிஸ்தான் அரசின், இந்த எல்லை மீறிய அட்டூழி யத்துக்கு, பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித் துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)