காரில் அமர முயன்ற யானையின் வைரலாகும் வீடியோ ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

காரில் அமர முயன்ற யானையின் வைரலாகும் வீடியோ !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
தாய்லாந்து நாட்டில் காவோ யாய் தேசிய பூங்கா உள்ளது. இங்குள்ள தானாரத் சாலையில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், பூங்காவில் இருந்த டியூவா என்ற ஆண் யானை (வயது 35) காரை வழி மறித்துள்ளது.
காரில் அமர முயன்ற யானை


இதன்பின் காரின் மீது யானை ஏற முயன்றுள்ளது. அங்கிருந்து தப்பி செல்ல காரின் ஓட்டுனர் முயற்சிக்கும் பொழுது, குறுக்கே சென்ற யானை தனது உடலை காரின் மீது வைத்து அமருவதற்கு முயன்றது.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காரின் பின்புற ஜன்னல், மேற்கூரை மற்றும் நடுப்பகுதி ஆகியவை சேதமடைந்தன.

இதுபற்றி பூங்கா இயக்குனர் சரீன் பவான் கூறும்பொழுது, ஈரப்பதம் மற்றும் குளிர்கால சூழலில் சுற்றுலாவாசி களை வரவேற்கவே டியூவா வெளியே வந்துள்ளது. 

அந்த நடுத்தர வயதுடைய யானை யாரையும் அல்லது எந்த வாகனங் களையும் துன்புறுத்துவது கிடையாது என கூறினார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர், இது போன்று மீண்டும் நடக்காமல் இருப்பதற் காக சுற்றுலா வாசிகள் தங்களது கார்களை யானைகளிடம் இருந்து 30 மீட்டர் தொலைவிலேயே நிறுத்தி விடுங்கள் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.COMMENTS

.ME
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close