வெப்பத்தை மறைத்து வைக்க முடியுமா?

மின்னாற்றலை சேமிக்கக் கூடிய சேம மின் கலங்களை நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகிறோம்.
வெப்பத்தை மறைக்க முடியுமா?

இவைகளைப் போன்று வெப்ப ஆற்றலை சேமித்து வைத்து மீளவும் பயன்பாட்டிற்கு அளிக்கவல்ல சேம வெப்ப கலங்கள் சாத்தியமா?

இது வரையில் வெறும் வினாவாக இருந்து வந்த இந்த வாக்கி யத்திற்கு இப்போது விடை கிடைத்திருக் கிறது.

மசாசூச (ஸ)ட்சு(ஸ்) தொழில் நுட்பக்கழக அறிவிய லாளர்கள் சூரியனிடமி ருந்தோ, வேறு வெப்ப மூலங்களில் இருந்தோ வெப்ப ஆற்றலை பெற்று சேமிக்க முடியும் என்றும், 

நமக்குத் தேவையான போது மீளவும் பெற முடியும் என்றும் கண்டறிந் துள்ளனர்.

ருத்தேனியம் (Ruthenium) என்னும் தனிமத்திற்கு ஒளி ஆற்றலை சேமிக்கும் திறன் உண்டு. மிக அரிதாக இந்த தனிமம் கிடைப்பதால் இதன் விலையும் அதிகம்.

ருத்தேனியமதி ன் கூட்டுப் பொருளான fulvalene diruthenium எனும் கூட்டுப் பொருள் வெப்ப ஆற்றலை சேமித்து வைக்கவும், 

நாம் வேண்டும் போது வெப்ப ஆற்றலை மீள அளிக்கவும் வல்லது என இப்போது கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது.
வெப்பம்

1996ல் கண்டு பிடிக்கப்பட்ட fulvalene diruthenium எனும் கூட்டுப் பொருள் ருத்தேனியம் ஐக்காட்டிலும் விலை குறைவானது.

வெப்ப ஆற்றலை ஒரு எரிபொருளாக சேமிக்க இயலும்; அதுவும் நீண்ட காலம் சேமிக்க முடியும் என்பதும் கூடுதல் சிறப்புகள். 

இவை எங்கும் எடுத்துச் செல்லக் கூடியவை. ருத்தேனியம் அரிதாக கிடைக்கக் கூடிய தனிமம் என்பதால் விலையும் அதிகம். 

ஆனால் ருத்தேனியம் ஐக்கொண்டு மூலக்கூறின் உள்ளே நடக்கும் செயல் பாடுகளை அறிவியலா ளர்கள் அறிந்து கொண்டுள்ளனர்.

இனி மேல் ருத்தேனியம் ஐப்போன்று செயல்படக் கூடிய விலை குறைவான எளிதில் கிடைக்கக் கூடிய தனிமங் களையோ,

கூட்டுப் பொருட்களளயோ உருவாக்குவது இந்த ஆய்வின் அடுத்த இலக்கு.( கூடிய வரை மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளது.)
Tags: