தமிழகத்தில் 4 புதிய பெரிய மாவட்டங்கள் உதயம்.. ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

தமிழகத்தில் 4 புதிய பெரிய மாவட்டங்கள் உதயம்.. !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நான்கு புதிய மாவட்டங்கள் உருவாக்கப் பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டி ருக்கிறது. 
4 பெரிய மாவட்டங்கள்


மேலும், புதிய தாலுகா விவரங் களையும், தமிழ்நாடு அரசு அறிவித்தி ருக்கிறது. காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி

ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு, தென்காசி, ராணிப் பேட்டை, திருப்பத்தூர் 

ஆகிய நான்கு புதிய மாவட்டங்கள் உருவாக்கப் படும், என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். 

இதன்படி, 4 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, அதுகுறித்த அரசாணையை, நவம்பர் 12ஆம் தேதியிட்டு, தமிழ்நாடு அரசு வெளி யிட்டிருக்கிறது.

இதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரண்டாக பிரிக்கப் பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரத்தை தலைமை யிடமாகவும், செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டை தலைமை யிடமாகவும் கொண்டு செயல்படும் என்றும் அறிவிக்கப் பட்டிருக்கிறது.


காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரண்டு வருவாய் கோட்டங்களும், 5 தாலுக்காக் களும் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில், மூன்று வருவாய் கோட்டங்களும், வண்டலூர் உட்பட 8 தாலுக்காக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி, தென்காசி என இரண்டு மாவட்டங் களாக பிரிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப் பட்டிருக்கிறது. 

இதன்படி, திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலியை தலைமை யிடமாக கொண்டும், தென்காசி மாவட்டம் தென்காசியை தலைமை யிடமாக கொண்டும் செயல்படும்.
தமிழகத்தில் பெரிய மாவட்டங்கள் உதயம்


திருநெல்வேலி மாவட்டம், 2 வருவாய் கோட்டங்கள், 8 தாலுக்காக்கள் கொண்ட தாகவும், தென்காசி மாவட்டம் 2 வருவாய் கோட்டங்கள், 8 தாலுக்காக்கள் கொண்ட தாகவும் இருக்கும்.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்றான வேலூர், மூன்றாக பிரிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப் பட்டிருக்கிறது. 

வேலூர் மாவட்டம், வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை என மூன்று மாவட்டங் களாக பிரிக்கப் பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் 6 தாலுக்காக் களை கொண்ட தாகவும், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகியவை, தலா 4 தாலுக்காக் களை கொண்ட மாவட்டங் களாக விளங்கும் என அறிவிக்கப் பட்டிருக்கிறது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களின், அதனதன் நகரங்களே, தலைமை யிடமாக விளங்கும் என்றும், தமிழ்நாடு அரசு வெளி யிட்டிருக்கும் அரசாணையில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

COMMENTS

.ME
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close