தங்க சுரங்க ஊழியர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 37 பேர் பலி !

0
தங்க சுரங்கத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், ஒப்பந்த தாரர்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் வழக்கம் போல் 5 பஸ்களில் பணிக்கு சென்று கொண்டிருந்தனர். 
ஊழியர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூடு


அவர்களின் பாதுகாப்புக் காக ராணுவ வீரர்கள் வாகனங்களில் அணிவகுத்து சென்றனர். 

அங்குள்ள ஒரு நெடுஞ்சாலை யில் சென்று கொண்டிருந்த போது சாலைக்கு அடியில் புதைத்து வைக்கப் பட்டிருந்த வெடிகுண்டில் ராணுவ வீரர்கள் வாகனம் சிக்கி வெடித்து சிதறியது. 

இதை யடுத்து அங்கு பதுங்கி யிருந்த பயங்கர வாதிகள் சுரங்க தொழிலாளர்கள் இருந்த 2 பஸ்கள் மீது சரமாரியாக துப்பாக்கி யால் சுட்டனர். 

கண் இமைக்கும் நேரத்தில் இந்த தாக்குதலை நடத்தி விட்டு பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். 

இந்த தாக்குதலில் 37 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 60 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதே போல் கனடா தங்க சுரங்கத்தின் ஊழியர்கள் பஸ்களில் அணிவகுத்து சென்ற போது, பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலியானது நினைவு கூரத்தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)