இந்தியா-வங்கதேசம் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் புயலால் பாதிக்கும் வாய்ப்பு ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

இந்தியா-வங்கதேசம் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் புயலால் பாதிக்கும் வாய்ப்பு !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
அரபிக் கடலின் மத்திய - கிழக்கு பகுதியில் ‘மஹா புயல்’ மையம் கொண்டுள்ளது. இந்த புயல் காரணமாக குஜராத் மற்றும் மகாராஷ்டிரா வின் சில மாவட்டங் களில் கனமழை பெய்து வருகிறது.
இந்தியா-வங்கதேசம் கிரிக்கெட் பாதிக்கும் வாய்ப்பு


வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வரும் இந்த புயலானது, வரும் நவம்பர் 7 ஆம் தேதி

அதிகாலையில் குஜராத்தின் டையு மற்றும் போர் பந்ததர் அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.

இந்த சமயத்தில் சுமார் 90 முதல் 100 கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும் எனவும் கனமழை பெய்ய வாய்ப்புள்ள தாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்தியா - வங்கதேசம் இடையேயான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 7 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெறுகிறது.

தற்போது ‘மஹா புயல்’ காரணமாக இந்த போட்டி பாதிக்கப் படுவதற்கான சூழல் உருவாகி யுள்ளது. 

டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாட்டிற்கு இடையில் நடைபெற்ற இந்தியா வுடனான் முதல் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத் தக்கது.

COMMENTS

.ME
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close