கர்ப்பிணிக்கு ஆர்எச் (RH) நெகட்டிவ் ரத்தப் பிரிவு இருந்தால் என்னாகும்?

0
கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு.
ஆர்எச் (RH) நெகட்டிவ் ரத்தப் பிரிவு


பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் (Antibodies) உற்பத்தியாக வழி வகுத்து விடு

ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிக்கப் படுகிறது? ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணு க்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது.

மனிதர்களின் ரத்தத்தில் இது போன்ற ஆர் எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லா விட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும் பாலானோருக்கு ஆர் எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணி தான்.

நடிகை பிரியா ஆனந்தின் மொத்த சொத்து மதிப்பு தெரியுமா?

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவு என்ன? 

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின்போது பெரும்பாலும் பிரச்சினை வராது.
ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்து விடும் அபாயம் உண்டு.

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவைத் தடுப்பது எப்படி?
பாசிட்டிவ் ரத்தக் காரணி


நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம்.

குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை (Antibodies) அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசி போட வேண்டும்.

இந்த ஊசிக்கு ‘Anti D‘’ என்று பெயர். ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்? வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம்.
இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)