கே.ஜி.எஃப் வைர சுரங்கங்களில் ஆப்ரிக்கர்கள் சுரண்டப்படுகிறார்களா?

0
பட்டைத் தீட்டப்படாத வைரங்களை ஜிம்பாப்வே விலிருந்து இறக்குமதி செய்வதற்கு அமெரிக்க அரசு இம்மாத தொடக்கத்தில் தடை விதித்தது. 
கே.ஜி.எஃப் வைர சுரங்கம்


இதற்கு அமெரிக்க சொல்லிய காரணம், "ஆப்ரிக்கா நாடுகளில் இருக்கும் வைர சுரங்கங்களில் ஊழியர்கள் கட்டாயமாக பணியமர் த்தப்பட்டு சுரண்டப் படுகிறார்கள்" என்பது தான்.

ஆனால், ஆப்ரிக்கா இந்த குற்றச்சாட்டை மறுத்து விட்டது. இது பொய்யான குற்றச்சாட்டு அல்லது அமெரிக்கா வை யாரோ தவறாக வழி நடத்துகி றார்கள் எனக் கூறி விட்டது.

சரி நிதர்சனம் தான் என்ன? களத் தகவல்கள் என்ன தெரிவிக்கிறது? என்பதை இங்கே விரிவாகக் காண்போம். கிழக்கு ஜிம்பாப்வேவில் இருக்கும் மெராங்கே பகுதியில் உள்ள வைர சுரங்கங்கள் தான் உலகிலேயே வளமான சுரங்கங்கள். 

அந்த நாட்டிற்குப் பொருளா தாரத்தை கொண்டு வந்து சேர்ப்பதில் இந்த சுரங்கங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. அங்கு என்ன நிலவரம் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு, அமெரிக்காவின் குற்றச் சாட்டைக் காண்போம்.

அமெரிக்காவின் குற்றச்சாட்டு

”வைர சுரங்கங்களில் பணி புரிந்தால் வாழ்வு வளமாகும் என நம்பும் சிலர் லஞ்சம் கொடுத்து சுரங்கங்களின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு நுழை கிறார்கள். 

ஆனால், அப்படி உள்ளே செல்பவர்கள் திரும்பச் செல்ல அனுமதிக்கப் படுவதே இல்லை.” இது தான் அமெரிக்காவின் குற்றச்சாட்டு. ஊழியர்கள் திரும்பச் செல்ல அனுமதிக்கப் படுவதே இல்லை. 


எதிர்ப்பு தெரிப்பவர்கள் கடுமையான உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் தண்டனைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள் என்று தெரிவிக்கிறது அமெரிக்கா வின் சுங்க முகமை.

இது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுகிறது அமெரிக்க அரசு.

என்ன ஆதாரம்?

இந்த சுரங்கங் களுக்கு மனித உரிமை செயற் பாட்டாளர்களோ அல்லது பத்திரிகை யாளர்களோ அவ்வளவு எளிதாக உள்ளே சென்று விட முடியாது. அதற்கு சிறப்பு அனுமதி தேவை.

சித்தரிப்புக்காக

சில குழுக்கள் மெராங்கே பகுதியில் உள்ள வைர சுரங்கங்களில் பணி புரிபவர்களின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்திருக்கிறது.

போச்சா வைர அறக்கட்டளையின் தலைவர் மோசஸ், "கிராம மக்கள் சுற்றி வளைக்கப்பட்டு கட்டாயமாகச் சுரங்கங்களில் பணியமர்த்தப் படுகிறார்கள்" என்று பிபிசியிடம் கூறி உள்ளார்.

ஆனால், சில குழுக்கள் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிப்பதில் கவனமாக இருக்கின்றன. இயற்கை வள மேலாண்மை மையம் சுரங்க பகுதியில் உள்ள மக்களின் உரிமைக்காகப் பிரசாரம் செய்து வருகிறது.
என்ன ஆதாரம்?


உடல் ரீதியாகத் தாக்கப் பட்டவர்களின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்திருப்ப தாகக் கூறும்

அந்த மையம் கட்டாயமாக பணியமர்த்தப் படுவது தொடர்பாக தங்களிடம் எந்த ஆவணமும் இல்லை என்கிறது.

அந்த மையத்தின் செய்தித் தொடர்பாளர் சிமிசோ, "கட்டாயமாக பணியமர்த்தப் படுகிறார்கள் என்ற குற்றச் சாட்டை நாங்கள் புறந்தள்ள வில்லை. 

ஆனால், எங்களிடம் அது தொடர்பாக எந்தத் தகவலும் இல்லை. அமெரிக்க அரசும் எந்த தகவலும் அளிக்க வில்லை. யார் யாரைக் கட்டாயப் படுத்துகிறார்கள் எனத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்" என்று கூறுகிறார்கள்.

இது முதல் முறையல்ல

இவ்வாறான குற்றச் சாட்டுகள் எழுப்பப் படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பே இவ்வாறான குற்றச் சாட்டுகள் எழுப்பப் பட்டுள்ளன.

மனித உரிமை செயற் பாட்டாளர்கள் இந்த வைரங்களை, 'சச்சரவு வைரங்கள்' என அழைக்கப்பட வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்து கிறார்கள்.

2011ஆம் ஆண்டு பிபிசி மேற்கொண்ட ஆய்விலும், வைர சுரங்க ஊழியர்கள் துன்புறுத்தப் படுவதும், பாலியல் ரீதியாகச் தெரிய வந்தது.
KGF Diamond Mines?


ரத்தக் கறை படிந்த இவ்வகை வைரங்கள் சுலபமாகச் சர்வதேச சந்தைக்குச் செல்வதாகக் கூறுகிறது இயற்கை வள மேலாண்மை மையம்.

ஊழியர்கள் துன்புறுத்தப் படுவதன் காரணமாக ஆண்டுக்கு 40 ஊழியர்கள் இறக்கிறார்கள் என்றும் அந்த மையம் கணக்கிடுகிறது.

வைர சுரங்கங்களில் மட்டுமல்ல

வைர சுரங்கங்களில் மட்டுமல்ல, ஜிம்பாப்வேவில் உள்ள புகையிலை பண்ணை களிலும் ஊழியர்கள் கட்டாயமாக பணிய மர்த்தப்பட்டு வேலை வாங்கப் படுவதாக மனித உரிமை கண்காணிப்பகம் 2018ஆம் ஆண்டு ஓர் அறிக்கை வெளியிட்டது.

குழந்தை தொழிலாளர் நடைமுறையும் அங்கு உள்ளதாக அமெரிக்க அரசு கடந்தாண்டு ஓர் ஆய்வறிக்கை யில் சுட்டிக் காட்டியது.

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக தாங்கள் அயராது பாடுபட்டு வருவதாக ஜிம்பாப்வே கூறுகிறது. விகடன்....
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)