தமிழகம் முழுவதும் பருவ மழை தீவிரம் !

0
தமிழ்நாடு முழுவதும் பருவ மழை தீவிரமடைந் துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் தமிழகத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. சென்னையில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
அணைகள் நிரம்பி வருகின்றன


மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஞாயிற்றுக் கிழமை இரவு முதல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறையில் 14 சென்டி மீட்டர் மழையும், பெரிய நாயக்கன் பாளையத்தில் 12 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

கோயம்புத்தூர், சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஞாயிற்றுக் கிழமை மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிரது. 

இதனால், இந்த மூன்று மாவட்டங் களிலும் பள்ளி களுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் கல்லூரி களுக்கும் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 126 அடியாக உயர்ந்தள்ளது. 

அணைக்கு நீர் வரத்து 3,169 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு ஆயிரத்து நானூறு கன அடி தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 117.8 அடியாக உள்ளது. அணையி லிருந்து வினாடிக்கு 2,350 கன அடி நீர் வெளியேற்றப் பட்டு வருகிறது.

இரவுக்குள் நிரம்பிவிடுமா பவானி சாகர்?

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஐந்து நாட்களுக்கு முன்பு 96 அடியாக இருந்த பவானி சாகர் அணையின் உயரம் தற்போது 101.21ஆக உயர்ந்துள்ளது. நீர் வரத்து விநாடிக்கு 13,211 கன அடியாக உள்ளது. 
இரவுக்குள் நிரம்பிவிடுமா பவானி சாகர்?


105 அடி உயரம் கொண்ட பவானி சாகர் அணை இரவுக்குள் நிரம்பி விடுமென எதிர்பார்க்கப் படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

தேனியில் உள்ள தூவானம் அணை நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அம்மாவட்டத்தில் உள்ள சுருளி அருவில் தண்ணீர் பெருக்கெடுத்து பாய்ந்து வருகிறது.

திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்யும் கன மழையால், கோதையாறு, தாமிரபரணி ஆகிய ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

குற்றாலத்தில் உள்ள பெரிய அருவி (மெயின் ஃபால்ஸ்), ஐந்தருவியில் குளிப்ப தற்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மலை ரயில் செல்லும் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ள தால், ரயில் போக்குவரத்து நிறுத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்து வரும் 2 நாட்களில் தமிழகம், புதுவையில் பெரும் பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், "வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

மேலும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வட தமிழகம் - தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதியிலும் வளி மண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. தவிர, அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. 
வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி


இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக, பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கன மழையோ, மிக கன மழையோ பெய்துள்ளது." என்று தெரிவித்தார்.

அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிக கன மழை பெய்யக் கூடும் என்றும் 

டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு விட்டுவிட்டு மழை பெய்யு மென்றும் கூறப்பட்டுள்ளது. 

மீனவர்கள் தென்மேற்கு வங்கக் கடல், குமரிக் கடல் பகுதிகளில் 21, 22 தேதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)