மழையால் கேரள தேர்தல் வாக்குப் பதிவு மையத்தில் வெள்ள நீர் !

0
மகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களின் சட்டப் பேரவை பொதுத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று திங்கள் கிழமை நடக்கிறது. 
தேர்தல் வாக்குப் பதிவு மையத்தில் வெள்ளம்


அத்துடன், தமிழ்நாட்டின் நாங்குநேரி மற்றும் விக்கிர வாண்டி உள்பட இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 51 சட்டப் பேரவை தொகுதிகள் மற்றும் 2 மக்களைவை தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவும் இன்று நடக்கிறது.

மஹாராஷ்ட்டிர சட்டப் பேரவை தேர்தலில் 2 மணி வரை 36.03% வாக்குகள் பதிவாகி யிருந்தன. தமிழ்நாட்டில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி விக்கிர வாண்டியில் 65.79 % வாக்குப்பதிவும் நாங்கு நேரியில் 52.18 % வாக்குப் பதிவும் நடந்திருந்தது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் சட்டமன்ற தொகுதியில் கனமழை காரணமாக மக்கள் சிரமத்துடன் வாக்குப் பதிவு செய்கின்றனர். "இடைத் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு வாய்ப்பு இல்லை. 

ஆனால் , சிரமம் இன்றி வாக்கு பதிவு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன. 


மழை நீர் புகுந்த பத்து வாக்கு பதிவு மையங்களை முதல் தளத்திற்கு மாற்றி அமைத்தி ருக்கிறோம்" என செய்தி யாளர்களை சந்தித்த கேரளாவின் தலைமை தேர்தல் அதிகாரி டிகா ராம் மீனா தெரிவி த்துள்ளார்.

மூழ்கும் வாக்குச் சாவடியில் கடமையாற்றும் வாக்காளர்கள் உத்தரப் பிரதேசத்தில் 11 சட்டப் பேரவைத் தொகுதிகளின் நடக்கும் இடைத் தேர்தலில் பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி 36.9% வாக்குகள் பதிவாகி யுள்ளன.

ஹிமாச்சல பிரதேசத்தின் தரம்சாலா மற்றும் பச்சட் தொகுதிகளின் இடைத் தேர்தலில் பகல் ஒரு மணிவரை 37.6 % மற்றும் 43.61% வாக்குகள் பதிவாகி யுள்ளன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)