யோகாசனம் உடற்பயிற்சி இரண்டுக்கும் வேறுபாடுகள் !

0
ஆசனங்கள் வழக்கமான உடற் பயிற்சியில் இருந்து பெருமளவு மாறுபடு கின்றன. இவற்றைச் செய்யும் முறையும் வேறு, இதனால் கிடைக்கும் பலன்களும் வேறு.
யோகாசனம்
தற்போது யோகாசனம் பிரபலமாகி வருகிறது. அதே சமயம், அதை பெரும் பாலானோர் ஓர் உடற்பயிற்சி வடிவமாகவே எண்ணுகி றார்கள். 

அது ஒரு தவறான புரிந்து கொள்ளல் ஆகும். உண்மையில் யோகாவில் உடல் சார்ந்த அம்சங்கள் தான் ஆசனங்கள் என்பவை. 

ஆசனங்கள் வழக்கமான உடற்பயிற்சியில் இருந்து பெருமளவு மாறு படுகின்றன. இவற்றைச் செய்யும் முறையும் வேறு, இதனால் கிடைக்கும் பலன்களும் வேறு. 

யோகாசனம் நிலையான அமைப்புக ளிலும், தசைகளை தளர விடுவதிலும் அதிக கவனம் செலுத்துகிறது. 

ஆசனம் ஒரு திடமான மற்றும் சவுகரியமான நிலை. அசைவுகள் மெதுவாகவும், கட்டுப் படுத்தப் பட்டவை யாகவும் இருக்க வேண்டும். மூச்சும் அதனுடன் ஒத்துழைக்க வேண்டும்.

வழக்கமான உடற் பயிற்சியில், அசைவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது, தசைகளில் அழுத்தம் தரப்படுகிறது. 

உடற் பயிற்சியில் சில குறிப்பிட்ட அசைவுகளைத் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டி யிருக்கும். அங்கே சுவாசம் அவற்றுடன் ஒருங்கிணைவ தில்லை. 

யோகாசனம், எலும்பு பரப்பில் தசைகள் ஒரே மாதிரியாக இருக்க உதவுகிறது, இதனால் நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கிறது. 

யோகாசனம் உடற்பயிற்சி இரண்டுக்கும் வேறுபாடுகள் !
யோகாசன மானது ஆற்றலை சிறப்பாக பயன் படுத்துகிற ஒரு செயலாகும். உடற் பயிற்சியானது, பொதுவாக தசையின் அளவை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. 

இதனால் தசையின் நீளம் குறைகிறது. நெகிழ்வுத் தன்மை குறைகிறது. உடற்பயிற்சி செய்கிற ஒருவர், நிறைய ஆற்றலைப் பயன்படுத்து கிறார்.

யோகாசனத்தில், உடல் ஒரு தளர்ந்த நிலையில் உள்ளது, ஆகவே சுவாச அமைப்பில் வேலைப்பளு குறைகிறது. 

ஆனால், வழக்கமான உடற் பயிற்சியில் தொடர்ச்சி யான அசைவுகள் இருப்பதால், தசைகளுக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரிக்கிறது. 

இதனால் சுவாசிக்கும் வேகம் அதிகரிக்கிறது, நுரையீரல்கள் அதற்கேற்ப அதிகம் உழைக்கிறது. யோகாசனம் உடலில் கார்டிசால் அளவைக் குறைக்கிறது. 

கார்டிசால் என்பது, கொலஸ்ட்ரா லிலிருந்து உண்டாகும் ஒரு ஹார்மோன். இது உணரப்படும் அழுத்தத்துடன் தொடர்புடையது. உடற் பயிற்சியானது உடலில் கார்டிசால் அளவை அதிகரிக்கக் கூடும். 

காரணம், உடற்பயிற்சியை உடல் ஓர் அழுத்தமாக உணர்கிறது. யோகாசனத்தின் போது, ஒரு குறிப்பிட்ட நாசித்து வாரத்தின் வழியே சுவாசம் நிகழும் போது, அறிவாற்றல் தூண்டப் படுகிறது. 
உடற்பயிற்சி
வழக்கமான உடற் பயிற்சியில் இது சாத்திய மில்லை. யோகாசனத் துக்கு பிறகு, உடல் தளர்ந்த நிலையில் உள்ளது. 

இதற்குக் காரணம், நரம்பு அமைப்புக்குக் கிடைக்கும் இதமான தாக்கம் தான். உடற் பயிற்சியின் போது, லாக்டிக் அமிலம் உண்டாகிறது. 

இது களைப்பு மற்றும் சோர்வை உண்டாக்கலாம். உடற் பயிற்சியின் பெரும்பாலான பலன்களை யோகாசனம் வழங்குகிறது. 

அதோடு, மன அமைதி, திருப்தி மற்றும் மகிழ்ச்சி போன்ற அம்சங்களையும் மேம்படுத் துகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)