வெளிநாட்டு வேலையை விட்டு மாட்டு பண்ணை அமைத்தவர் - வருமானம் என்ன தெரியுமா?

0
இன்றைய காலத்தில் விவசாயம் என்பது கொஞ்சம் கொஞ்சம் அழிந்து கொண்டு வருவதை நாம் கண் கூடாக அவதானித்து வருகின்றோம். 
மாட்டு பண்ணை அமைத்தவர்


ஆங்காங்கே பல விவசாயிகள் மழை இல்லாமல் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுவதால் அதிகமாக தற்கொலை செய்து வருகின்றனர்.

அது மட்டுமின்றி கிராமப் புறங்களில் வளர்ந்து வரும் இளைஞர் களும் வெளிநாடு, வெளியூர் என சென்று கை நிறைய சம்பாதிக்கும் தொழிலையும், சேற்றில் கால் பதிக்காமல் மிகவும் சுத்தமான வேலை என்று ஐடி தொழிலையே நாடி வருகின்றனர்.

இவர்களுக்கு எடுத்துக் காட்டாக சில இளைஞர்கள் தற்போது ஆடு, மாடு வளர்ப்பதிலும், விவசாயம் பார்ப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

அவ்வாறு விவசாயத்தின் அருமையை அறிந்து சிலர் தனது பணிகளையும், பட்டங் களையும் கடந்து விவசாயத்தில் கால்பதிக்க தயாராகி வரும் இளைய தலைமுறை யினரை இங்கே காணலாம்.

நிலம், நீரின் பங்களிப்பு இல்லாமல், உணவு படைக்க இயலாது என்பதை நுட்பமாக பார்த்த நம் தமிழ் சமூகம், 'உணவெனப் படுவது நிலத்தொடு நீரே' என்று, அருமையான வரையறை தந்து வியப்பூட்டி யுள்ளது.

எத்தனையோ சவால்களை சந்திக்கும் விவசாயிகளின் அருமை, இப்போது அதிகமாக புரிந்து கொள்ள முடிகிறது. 'சேற்றில் கால் வைத்தால் தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும்' என்பதை, உணர்ந்து வருகிறோம்.

தற்போது அவுஸ்திரேலியா நாட்டில் சிவில் இன்ஜினியராக இருந்த ராஜேஷ் கார்த்திக், தனது வேலையை உதறிவிட்டு, பால் பண்ணையில் கவனம் செலுத்தி வரும் அவரைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
வருமானம் என்ன தெரியுமா?


இந்தியாவில் திருப்பூர் செஞ்சேரி மலையை சேர்ந்த ராஜேஷ் என்பவரும், நண்பர் பிரகாஸ் என்பவரும் இணைந்து 6 ஏக்கர் நிலத்தினை குத்தகைக்கு எடுத்து நாட்டுப்பசுக்களை வளர்த்து வருகின்றனர்.

கோவையில் இன்ஜிரியங் படிப்பினை முடித்த ராஜேஷ் அவுஸ்திரேலி யாவில் ஆறு ஆண்டுகளாக சிவில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். 

கால்நடைகள் மீது ஏற்பட்ட ஆர்வத்தினால் அந்த வேலையினை விட்டு இந்தியாவிற்கு வந்த இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக பால் பண்ணை நடத்தி வருகின்றார்.

குஜராத்தை சேர்ந்த, 135 'காங்கிரேஜ்' ரக பசுக்களை மட்டும் வைத்து, தினமும், 126 லிற்றர் பால் கறந்து, லிற்றர் ரூபாய் 100-க்கு விற்பனை செய்வதுடன், தயிர், மில்க் ஷேக் உட்பட பால் பொருட்களும் விற்பனை செய்து வருவதில் மாதத்திற்கு 1.5 லட்சம் சம்பாதித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம், மீனாட்சி புரம் ராமர் பண்ணையைச் சேர்ந்த ஞான சரவணன். முதுநிலை மனிதவளம் படிப்பு முடித்து, தனியார் நிறுவனத்தில் பணி புரிந்த இவர் 

கடந்த 2017ம் ஆண்டு முதல் தென்னை, காய்கறி விவசாயம், பால் பண்ணை என பல்வேறு விஷயங்களில் பட்டையை கிளப்பி வருகின்றார். விவசாய குடும்பத்தினைச் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் தனது படிப்புக்கேற்ற வேலையைச் செய்துள்ளார். 

பின்பு ஏழு ஆண்டு களுக்கு பின்பு 3 ஏக்கர் நிலத்தில் காய்கறியும், 33 ஏக்கரில் தென்னை விவசாயமும் நடத்தி வருகின்றார். மேலும் இந்த விவசாயத்திற்கு தேவையான ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம், மண்புழு உரம் ஆகியவற்றை தானே தயார் செய்கின்றார்.
பால் பண்ணை


அது மட்டுமின்றி நாட்டு மாடு, கலப்பின மாடுகள் என 35 மாடுகள் வைத்து தினமும் 150 லிற்றர் பால் கறந்து விற்று வருகின்றார். 

20 கோழிகளை வைத்து கோழிப் பண்ணையும் வைத்து விவசாயம் பார்த்து இவர் ஆண்டுக்கு 35 முதல் 40 லட்சம் வரை விவசாயத்தில் வருமானம் பெற்று வருகின்றார்.

மேலும் இளைஞர்கள் விவசாயத்தில் தடம் பதிப்பதற்கு இதுகுறித்து பயிற்சியும் அளித்து வருகின்றார். இன்றைய தலைமுறை யினர் பலரும் விவசாயத்தில் இறங்க பயப்படு கின்றனர். 

தன்னம்பிக்கை யுடன் இறங்கினால் எங்களை போன்றோர் நிச்சயம் உறுதுணை யாக இப்பார்கள் என்றும் எங்களது தன்னம் பிக்கையும், விவசாயத்தில் இருந்த ஆர்வமும் தான் காரணம் என்று இவர்களின் கருத்தினை முன் வைக்கின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)