சசிகலா சிறையில் விதி மீறியது உண்மை தான் ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

சசிகலா சிறையில் விதி மீறியது உண்மை தான் !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலா சிறை விதிகளை மீறியது உண்மை தான் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சசிகலா

சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலா, சிறையில் விதிகளை மீறியதாக புகார் எழுந்தது. 

இதனை யடுத்து அப்போதைய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, சிறையில் திடீர் சோதனை நடத்தினார். சோதனையில், சிறை விதிமுறை களை மீறி தனி சமையல், சிறையி லிருந்து வெளியே சென்றது உள்ளிட்ட வற்றை கண்டு பிடித்தார். 
விஷேச சலுகை களுக்காக சிறைத்துறை டி.ஜி.பி. சத்ய நாராயணராவ், சசி தரப்பிலிருந்து ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சாட்டினார்.

இதனை யடுத்து இப்புகார்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர் மட்டக் குழுவை கர்நாடக அரசு அமைத்தது. 
விதி மீறியது உண்மை

கடந்த ஜனவரியில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சசிகலா சிறை விதிமுறை களை மீறியது உண்மை தான் என தெரிய வந்துள்ளது. 

மேலும் டி.ஐ.ஜி., ரூபா கூறிய குற்றச் சாட்டுகள் அனைத்தும் உண்மை தான் எனவும் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, 2020 பிப்., மாதம் தனது மூன்றாண்டு சிறை தண்டனையை நிறைவு செய்கிறார். 
இதனை யடுத்து நன்னடத்தை அடிப்படை யில் சிறை யிலிருந்து விடுதலை யாக, சசி திட்டங்கள் வகித்திருப்ப தாக தகவல் வெளியாகி உள்ளது. அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்ட தகவல் தற்போது கசிந்து, சசியின் விடுதலை கனவை கலைய வைத்துள்ளது.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause