ஏமனில் போரை நிறுத்த ஈரான் வலியுறுத்தல் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

ஏமனில் போரை நிறுத்த ஈரான் வலியுறுத்தல் !

Subscribe via Email

வளைகுடா பகுதியில் பதற்றத்தைத் தணிக்க ஏமனில் நடத்தும் வான்வழித் தாக்குதலை சவுதி நிறுத்த வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தி யுள்ளது.
ஏமனில் போர்இது குறித்து ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறும் போது, ”வளைகுடா பகுதியில் பதற்றத்தைத் தணிப்பது தொடர்பாக சவுதி யிடமிருந்து எங்களுக்கு முழுமையான அறிகுறிகள் இதுவரை வரவில்லை.

அதற்கு முதலில் அவர்கள் ஏமனில் நடத்தும் வான்வழித் தாக்குதலை நிறுத்த வேண்டும்” என்றார்.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. 

இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல் படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சி யாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சி யாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. ஏமனில் நடக்கும் உள்நாட்டுப் போருக்கு லட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் சவுதியின் எண்ணெய் ஆலையை ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சி யாளர்களான ஹவுத்திப் படையினர் தாக்கினர். 

இதனைத் தொடர்ந்து ஏமனில் சவுதி தாக்குதலைத் தீவிரப் படுத்தியது குறிப்பிடத் தக்கது.

No comments

Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close