உயிரை காக்க வந்த வாலிபரை உதாசீனம் படுத்திய பெண் !

0
உயிரை காக்க வந்த வாலிபரை, இளம் பெண் ஒருவர் கிண்டல் செய்து அவமானப் படுத்தி யுள்ளார். தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை பார்த்தால், மற்றவர்களுக்கு உதவும் எண்ணமே இனி உங்களுக்கு வராமல் போகலாம்.
வாலிபரை உதாசீனம் படுத்திய பெண்




சாலையில் ஏதேனும் விபத்துக்களை காண நேரிட்டால், அனைவரது மனமும் ஒரு கணம் துடிதுடித்து போகும். எனவே சாலை விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயத்தில் உள்ளவர் களுக்கு உதவி செய்யும் உயர்வான பழக்கம் நம்மில் பலருக்கும் நிச்சயமாக இருக்கும்.
அதாவது ஏதேனும் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர், ஸ்டாண்டை எடுக்காமல் பயணம் செய்தால், உடனே ஸ்டாண்டை எடுக்கும்படி, மற்ற வாகன ஓட்டிகள் அவருக்கு எச்சரிக்கை செய்வார்கள். இதன்மூலம் சம்பந்தப்பட்ட இரு சக்கர வாகன ஓட்டி, விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் நீங்குகிறது.

இதே போல் பெண்களின் சேலை அல்லது துப்பட்டா போன்றவை, இரு சக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி கொள்ளும் அபாயத்தை காண நேரிட்டாலும், உடனடியாக அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர்.
உயிரை காக்க வந்த வாலிபர்




பைக் சக்கரத்தில் சேலை அல்லது துப்பட்டா சிக்கி இளம்பெண் பலி என்பது போன்ற செய்திகளை அடிக்கடி காண நேரிடுகிறது. நம் கண் முன்னே அப்படி ஒரு விபரீதம் அரங்கேறி விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வே இதற்கு மிக முக்கியமான காரணம்.

அத்துடன் வாகனத்தின் சக்கரத்தில் காற்று குறைவாக இருந்தாலோ அல்லது ஹெட்லைட் சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ, குறைந்த பட்சம் சைகை மூலமாவது, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எச்சரிக்கை செய்யும் வழக்கம் பலரிடமும் காணப்படுகிறது.
முன்பின் அறிமுகமே இல்லாத நபர்கள் செய்யும் இத்தகைய சிறு சிறு உதவிகள் மூலமாக பெரிய அளவிலான சாலை விபத்துக்கள் தவிர்க்கப் படுகின்றன. யார் என்றே தெரியாத நபர்கள் மூலம் கிடைக்கும் இத்தகைய உதவிகளால், சம்பந்தப் பட்ட நபர்களின் உள்ளம் குளிர்ந்து போகும்.

தக்க சமயத்தில் உதவி செய்த அந்த நபர் கடவுளாக தெரிவார். ஆனால் இங்கு நடந்த கதையே வேறு. சாலை விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயத்தில் இருந்த 2 இளம் பெண்களை காப்பாற்ற முயன்ற நபர் கிண்டல் செய்யப்பட்டு அவமானப் படுத்தப்பட்டி ருக்கிறார்.

ஹோண்டா டியோ ஸ்கூட்டர் ஒன்றில் இரண்டு இளம்பெண்கள் வந்து கொண்டி ருந்தனர். பார்ப்பதற்கு அது பழைய தலைமுறை டியோ போல் தெரிகிறது. இதில், ஸ்கூட்டரை ஓட்டி வந்த இளம்பெண் ஹெல்மெட் அணிந்திருந்தார். ஆனால் பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண் ஹெல்மெட் அணிய வில்லை.
பைக் சக்கரத்தில் சேலை




இந்த சூழலில், ஸ்கூட்டரின் ஸ்டாண்ட் எடுக்கப் படாமல் இருந்தது. இதனை கவனித்த மற்றொரு வாகன ஓட்டி ஒருவர், ஸ்டாண்ட்... ஸ்டாண்ட்... என எச்சரிக்கை செய்தார். ஆனால் ஸ்கூட்டரை ஓட்டி சென்ற இளம்பெண், ஸ்டாண்ட்டை எடுப்பதற்கு பதிலாக வேண்டு மென்றே எழுந்து நின்றார்.

எழுந்து நில் என்பதற்கும் ஆங்கிலத்தில் ஸ்டாண்ட் (Stand) என்ற வார்த்தை தான் உபயோகிக்கப் படுகிறது. எனவே எச்சரிக்கை செய்த நபர் கூறியபடி ஸ்டாண்ட்டை எடுக்காமல், வேண்டு மென்றே எழுந்து நின்று கொண்டு அந்த இளம்பெண் ஸ்கூட்டரை ஓட்டி சென்றார்.
பிரமதி முத்தாலக்ஸே என்பவர் தற்போது அந்த வீடியோவை டிவிட்டரில் வெளியிட் டுள்ளார். அவர் பதிவிட்ட உடனேயே, சமூக வலை தளங்களில், அந்த வீடியோ வைரலாக பரவ தொடங்கி விட்டது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், உண்மையில் இது போன்று நடந்து கொள்வது என்பது மிகவும் அபாயகர மானது. இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது? என்பது தொடர்பான உறுதியான விபரம் எதுவும் வெளியாக வில்லை.

ஆனால் இது பாகிஸ்தானாக இருக்க கூடும் என்று கருதப் படுகிறது. ஏனெனில் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலை தள பயன் பாட்டாளர்கள் பலரும் இந்த சம்பவம் நடைபெற்ற இடம் பாகிஸ்தான் என்று தான் கூறி வருகின்றனர்.
அதிக பேரின் கவனத்தை ஈர்க்க




அதே நேரத்தில் இந்த வீடியோ முன்கூட்டியே திட்ட மிடப்பட்டு எடுக்கப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவி வருகிறது. ஏனெனில் தற்போது அதிக பேரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, வித்தியாசமான வீடியோக்களை பலர் எடுத்து கொண்டுள்ளனர்.
அத்துடன் அந்த வீடியோக் களை, சமூக வலை தளங்களிலும் பரவ விடுகின்றனர். எனவே அது போன்று பலரது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, முன்கூட்டியே திட்ட மிடப்பட்டு இந்த வீடியோ எடுக்கப் பட்டிருக்க லாம் என்றும் கூறப்படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)