INX மீடியா வழக்கு என்றால் என்ன?

0
INX மீடியா மோசடி வழக்கு தான் இந்தியாவின் Hot மற்றும் TOP நியூசாக உள்ளது. அது என்ன ஐஎன்எக்ஸ் மீடியா, அப்படி என்றால் என்ன என்பதை தற்போது விரிவாக பார்க்கலாம்….
INX மீடியா வழக்கு என்றால் என்ன?
யார் இந்த இந்திராணி முகர்ஜி?…. ஐஎன்எக்ஸ் முறைகேடு என்றால் என்ன?மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் சிறிய அளவில் தனியார் கம்பெனிகளின் வேலைக்கு ஆள்பிடிக்கும் மேன்பவர் நிறுவனத்தை நடத்திவந்தார்.

பின்னர், மும்பைக்கு இடம் பெயர்ந்து, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பணியாட்களை தேர்வு செய்யும் பொறுப்பு இந்திராணி முகர்ஜியின் வாழ்க்கையில் திருப்பு முனையானது. 

இதன் பின்னர், ஸ்டார் இந்தியா நிறுவனத்திற்கு பணியாட்களை தேர்வு செய்யும் பொறுப்பு கிடைத்தது.

இதைத்தொடர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐஎம்டி நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் நிர்வாகிகளை தேர்வு செய்யும் இயக்குநர் பதவியை பிடித்தார் இந்திராணி முகர்ஜி, 

படிப்படியாக வளர்ந்து, மும்பை ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்தின் நிர்வாகி பதவிக்கு உயர்ந்தார்.
இதன் பின்னர், 2007 ஆம் ஆண்டு தொழில் துறையில் அகலக்கால் வைத்தார். ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் மூலம், 9x பொழுது போக்கு தொலைக் காட்சிசேனல், 

நியூஸ் எக்ஸ் ஆங்கில தொலைக்காட்சி, பிராந்திய மொழிகளில் மூன்று சேனல்கள், மெட்ரோ நியூஸ் சேனல்கள் ஆகியவை தொடங்கப் பட்டன.

இதன் பின்னர் தான் சிக்கல் ஏற்பட்டது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 800 கோடிரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. 

இந்த காலகட்டத்தி ல் தான் மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களின் மூலம் தற்போது பிரச்சனைக் குள்ளாகியுள்ள 307 கோடி ரூபாய் பணப்பரி வர்த்தனை நடைபெற்றது.

இதில் தான் அப்போது நிதியமைச் சராக இருந்த ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக வழக்குகள் தொடரப் பட்டன. 
INX மீடியா வழக்கு என்றால் என்ன?
பிரச்சனையின் சூத்திர தாரியான இந்திராணி முகர்ஜி, மகளை கொலை செய்த வழக்கில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டு அப்ரூவர் ஆனார். 

இதைத் தொடர்ந்து, அரசியல் காட்சிகள் மாறின ப.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் மீதான சி.பி.ஐ. அமலாக்கத் துறையின் பிடி இறுகியது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு பண உதவி செய்தது, கார்த்திக் சிதம்பரத்தின் செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்”என்று குற்றம் சாட்டப் பட்டது. 

வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கு கார்த்திக் சிதம்பரம் உதவியதற் காகவே, பலகோடிரூபாய் பணம் கைமாறியது உறுதியானது.
டெல்லியில் உள்ள வீடு, ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் டென்னிஸ் கோர்ட், இங்கிலாந்தில் பண்ணை வீடு ஆகியவை கார்த்திக் சிதம்பரத்தால் வாங்கப் பட்டதாக கூறப்படுகிறது. 
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு பணப்பரிவர்த் தனை நிகழ்ந்த காலத்தில் தான், இந்த சொத்துக்கள் வாங்கப் பட்டதற்கும் ஆதாரங்கள் கிடைத்தன.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை இதன் பின்னரே, தீவிர மடைந்தது. அமலாக்கத் துறை, சிபிஐ விசாரணை வளை யத்திற்குள் ப.சிதம்பரம் கைது செய்யப் பட்டார். 

மேன் பவர் நிறுவனம் நடத்தி மீடியா அதிபராக உயர்ந்து, கொலை வழக்கில் சிக்கி, அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜியே ஐஎன்எக்ஸ் வழக்கின் தொடக்கமும்…முடிவும்…
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)