மாமியாரின் உடலைச் சுமந்து சென்ற நான்கு மருமகள்கள் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

மாமியாரின் உடலைச் சுமந்து சென்ற நான்கு மருமகள்கள் !

Subscribe Via Email

4 மருமகள்கள் சேர்ந்து மரணமடைந்த தங்களது மாமியாரின் உடலைச் சுமந்த சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. மருமகள் - மாமியார் என்றால் நம்மில் பலருக்கு உடனடியாக நினைவில் வருவது சண்டை தான். 
மாமியாரை சுமந்து சென்ற மருமகள்கள் !




திருமணமான பெண்ணையோ அல்லது ஆணையோ நலம் விசாரிப்ப வர்கள் கூட மருமகள் - மாமியார் பிரச்னை உங்கள் வீட்டில் எப்படி இருக்கிறது என்று தான் கேட்பார்கள்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் மரணமடைந்த தங்களது மாமியாரின் இறுதிச் சடங்கின் போது அவரது உடலை மருமகள்கள் நால்வர் சேர்ந்து தூக்கிச் சென்றுள்ளனர். 

இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுந்தர்பாய் நைக்வாடே என்ற 83 வயதுடைய பெண்ணுக்கு 4 மகன்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணமான நிலையில் தனது 4 மருமகள் களையும் மகள்களைப் போலவே நடத்து வந்துள்ளார். 




மகன்கள், மருமகள்கள், பேரக் குழந்தைகள் என கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த சுந்தர்பாய் நைக்வாடே உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் கண்தானம் செய்திருந்த நிலையில் இறந்தவுடன் அவரது ஆசைப்படியே கண்கள் தானம் செய்யப் பட்டன. 
தங்களை மகள் போல் நன்கு கவனித்துக் கொண்ட மாமியாருக்கு இறுதியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த மருமகள்கள், இறந்த மாமியாரின் உடலை சுடுகாடு வரை சுமந்து சென்றனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி யடைந்தனர்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close