மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கில் பணம் !





மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கில் பணம் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
புதுவையில் உள்ள பொது மக்களுக்கு இலவச அரிசி வழங்குவது தொடர்பாக கவர்னர்-அமைச்சரவை இடையே தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகிறது. 
மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு பணம்

அனைத்து திட்ட பயன்களுக் கான நிதியும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப் படுகிறது.

 
அதே போல் இலவச அரிசிக்கு பதிலாக அதற்கான தொகையையும் பயனாளிகளின் வங்கிக் கணக்கிலேயே செலுத்த வேண்டும் என்று கவர்னர் வலியுறுத்தி வருகிறார். 
ஆனால் இலவச அரிசிதான் வழங்க வேண்டும் என்று அமைச்சரவை வலியுறுத்தி வருகிறது. 
 
இதை யொட்டி கவர்னர் அமைச்சரவை இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள தால் இது தொடர்பான கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பப் பட்டுள்ளது.

இதனிடையே அரிசி வழங்கா விட்டால் அதற்கான பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று சட்டமன்ற கூட்டத்தின் போது பல்வேறு எம்.எல்.ஏ.க்களும் வலியுறுத்தி னார்கள். 


அரிசி வழங்குவதில் பிரச்சினை உள்ளதால் பணம் வழங்கினால் கூட போதும் என்று பொது மக்களில் பல்வேறு தரப்பினரும் வெளிப்படை யாக பேசத் தொடங்கி னார்கள். 
இதைத் தொடர்ந்து பிரச்சினை தீரும் வரை அரிசிக்கான பணத்தை பயனாளி களின் வங்கிக் கணக்குகளில் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து அமைச்சர் கந்தசாமியின் அலுவலகம் ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது அதில் கூறப்பட்டிருப் பதாவது:- 

 
குடும்ப அட்டைதாரர் களுக்கு அரிசிக்கு பதிலாக பணம் செலுத்த முடிவு செய்யப்பட்டு அனைத்து மஞ்சள் நிற ரேஷன் அட்டைதாரர் களுக்கும் அட்டை ஒன்றுக்கு ரூ.300 என்ற வகையில் ஜனவரி மாதத்தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப் பட்டுள்ளது. 
மேலும் பிப்ரவரி, மார்ச் ஆகிய 2 மாதங்களுக் கான பணம் ரூ.600 மஞ்சள் நிற ரேஷன் அட்டை தாரர்களுக்கு இன்னும் ஒரு வார காலத்திற்குள் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

அனைத்து சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர் களுக்கும் இன்னும் ஒரு மாதத்திற்குள் ஏப்ரல் மாத அரிசிக்கான தொகை வழங்கப்படும். 


படிப்படி யாக தொடர்ந்து இலவச அரிசி வழங்க நடவடிக்கை துரிதப்படுத் தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)