பறக்கும் டைனோசர் தெரியுமா?

0
பதினாறு கோடி வருடங்களுக்கு முன்பு சீனக் காடுகளில் வேட்டையாடும் பிராணி ஒன்று வாழ்ந்து வந்தது. வினோதமான, சிறிய உருவமுள்ள அந்த உயிரினத்துக்கு வௌவாலைப் போல பறக்கும் திறன் உண்டு! 
பறக்கும் டைனோசர்



ஒரு மரத்தை விட்டு இன்னொரு மரத்துக்கு அதனால் சுலபமாகத் தாண்ட முடியும். சமீபத்தில் அந்தப் பிராணியின் புராதன எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன. 

ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அந்த எலும்புக் கூடுகள் டைனோசரின் குடும்பத்தைச் சேர்ந்தது என்று தெரிய வந்திருக்கிறது.
சுமார் 20 கோடி வருடங்களுக்கு முன்பு வாழ்ந்ததாகச் சொல்லப் படுகிற டைனோசர் களின் முதல் எலும்புக் கூடே பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் கண்டு பிடிக்கப் பட்டது. 

தவிர, டைனோசர்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட வகைகள் இருந்திருக் கின்றன.  அவற்றில் ஒன்று தான் இது என்று விஞ்ஞானிகள் உறுதி செய்திருக் கின்றனர். 
விரைவில் பறக்கும் டைனோசரை ஏதாவது ஹாலிவுட் படத்தில் பார்க்கலாம்!ஸ்பீல்பெர்க், ஸ்கிரிப்ட் ரெடியா?!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)