டெய்லி கரண்ட் கட்டாகுது - சாக்‌ஷி தோனி !

0
ராஞ்சியில் தினமும் 4 மணி முதல் 7 மணி நேரங்கள் வரை மின்வெட்டு இருப்பதாக சாக்‌ஷி தோனி அதிருப்தி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், பிரபல கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது குடும்பம் வசித்து வருகிறது. 
சாக்‌ஷி தோனி




இந்நிலையில், அப்பகுதியில் தினந்தோறும் 5 மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு இருந்து வந்துள்ளது. இதனால் அதிருப்தியில் இருந்துவந்த தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி இது குறித்து ட்விட்டரில் புலம்பி யிருக்கிறார். 

கடும் மின்வெட்டு குறித்து ட்வீட் செய்துள்ள அவர் “ராஞ்சியில் வசிக்கும் மக்கள் தினந்தொரும் மின்வெட்டை சந்தித்து வருகின்றனர். 
இந்த மின்வெட்டு 4 முதல் 7 மணி நேரம் வரை நீள்கிறது. இந்த பதிவை இடும் நாளான 19 செப்டம்பர் 2019ல் கடந்த 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்சார விநியோகம் இல்லை. 

இப்போது நடக்கும் மின் வெட்டிற்கு எத காரணமும் இல்லை. கால நிலையும் நன்றாக இருக்கிறது. எந்த விழாக்களும் நடக்க வில்லை. 

ஆனால் தினந்தோறும் மின்வெட்டு இருக்கிறது. இது குறித்து சம்பத்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று சாக்‌ஷி தோனி தெரிவித்துள்ளார்.




சாக்‌ஷி தோனியின் ட்வீட்டுக்கு 2500க்கும் மேற்பட்டோர் லைக் இட்டுள்ளனர். அதோடு, ஜார்கண்ட் மாநில முதல்வர் ரகுபர் தாஸ் மற்றும் அப்பகுதி அதிகாரி களுக்கு அந்த பதிவை டேக் செய்துள்ளனர். 
தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆளும் கட்சியாக இருந்து வரும் நிலையில், இந்த ஆண்டு டிசம்பரில் பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. 

தற்போது வரவிருக்கும் தேர்தலிலும் பாஜகவே வெற்றிபெறும் என்று ரகுபர் தாஸ் கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில், தினந்தோறும் நடக்கும் மின்வெட்டு பொது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி யிருக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)