ரத்தம்.. கீறல்.. வாய் பேச முடியாத 7 வயது சிறுமி !

0
சிறுமிக்கு உடம்பெல்லாம் வழிந்தது ரத்தம்.. எங்கு பார்த்தாலும் கீறல்கள்.. மனநலம் பாதிக்கப்பட்ட 7 வயது மகளின் நிலைமையை பார்த்து பதறினார் பெற்ற தாய்.. 
காப்பகம்




குழந்தையை நாசம் செய்தவரை கைது செய்ய வேண்டும் என்று பல அமைப்புகள் ஒன்று கூடி போராட்டத் தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை தந்துள்ளது.
தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார் அந்த ஏழை தாய். 7 வயதில் ஒரு பெண் குழந்தை. மனநலம் பாதிக்கப் பட்டவள்.

அத்துடன் வாய் பேசவும் முடியாது. அதனால், மகளை தேனியில் உள்ள ஒரு மனநல காப்பகத் துக்கு தினமும் ஆட்டோவில் அழைத்துச் செல்லப் படுவது வழக்கம்.

காப்பகம்

அப்படித் தான் கடந்த 19-ந்தேதி சிறுமி காப்பகத்து க்கு சென்று விட்டு, அன்று சாயங்காலம் ஆட்டோவில் வீடு திரும்பினாள். வீட்டுக்கு வந்தவ ளுக்கு அம்மா துணி மாற்றிவிட போனார். 

அப்போது அவளது துணி யெல்லாம் ரத்தம் இருந்ததை பார்த்து அதிர்ந்து விட்டார். மேலும் உடம்பில் காயங்களும் இருந்தன. என்ன நடந்தது என்று மகளால் சொல்ல முடியாத நிலையில் கதறி அழுதார் தாய்.
அழுகை - ஆத்திரம்

உடனடியாக தேனி அரசு ஆஸ்பத்திரி க்கு தூக்கி கொண்டு ஓடினார். அங்கு டாக்டர்கள் சிறுமியை பார்த்து விட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதாக சொல்லவும் உறைந்து நின்றார் தாய். 

ஆத்திரமும், அழுகையு மாக தேனி மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

போராட்டம்
போராட்டம்




ஆனால் வாய் பேச முடியாத, மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நடந்த இந்த அநீதியை அறிந்து, பெற்றோர், உறவினர்கள் மாவட்ட எஸ்பி ஆபீஸ் முன்பு போராட்டத்தில் குதித்தனர். 
விஷயத்தை கேள்விப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பெண்கள் விடுதலை கழகம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகளும் விரைந்து வந்து விட்டனர்.

பரபரப்பு

சிறுமியை நாசம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங் களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு அங்கு நிலவியது. 

இதை யடுத்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. தொடர்ந்து இது சம்பந்தமாக கலெக்டர் அலுவலக த்திலும் மனு அளிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)