பாலியல் தாக்குதலின் போது பெண் கூக்குரல் எழுப்பாததால்.... !

0
பாலியல் வல்லுறவு சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்ட பெண் கூக்குரல் எழுப்ப வில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப் பட்டவரை நீதிமன்றம் விடுதலை செய்ததை யடுத்து இது குறித்து விசாரிக்கப் போவதாக இத்தாலியின் நீதித்துறை அமைச்சர் தெரிவித் துள்ளார்.
பாலியல் தாக்குதல்



தன் மீது பாலியல் தாக்குதல் தொடுத்த சகபணி யாளரிடம், வேண்டாம் என முடிந்தவரை சொல்லிப் பார்த்தும் தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டதாக கூறுவது, அதை நிரூபிக்க போதுமான ஆதாரமாகக் கருத முடியாது என கடந்த மாதத்தில் டூரினில் உள்ள ஒரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பாதிக்கப் பட்டதாக கூறப்படும் பெண் மீது தற்போது அவதூறு குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீர்ப்பு இத்தாலி மக்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.

இது குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அன்னா கிரேஸியா களாபிரியா கூறுகையில், ''தனக்கு நடந்த கொடுமை யால் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்த ஒரு பெண்ணின் எதிர்வினைக்கு நிச்சயம் தண்டனை யளிக்க முடியாது'' என்று தெரிவித்தார்.

இதனிடையே, நீதித்துறை அமைச்சர் ஆண்ட்ரியா ஆர்லாண்டோ தனது அமைச்சக ஆய்வாளர் களை இந்த வழக்கு குறித்து விசாரிக்கு மாறு பணித்ததா கவும்,
2011-ஆம் ஆண்டில் நடந்த சம்பவங்களை அக்குழு ஆய்வு செய்து வருவதாகவும் அன்சா செய்தி முகமை தெரிவித்துள்ளது. டூரின் நகரில் உள்ள மருத்துவ மனைகளில் பணியாற்றி யுள்ள பாதிக்கப்பட்ட பெண், 
பாலியல் நடவடிக்கை



இவ்வழக்கின் பிரதிவாதி தன்னை பாலியல் நடவடிக்கை களில் ஈடுபட வற்புறுத்தி யதாகவும், அவருக்கு ஒத்துழைக்க மறுத்தால் தனக்கு அவர் பணி வழங்க மறுத்ததாக வும் தெரிவித்ததாக கோரியாரே டெலா சேரா என்ற இத்தாலிய மொழியில் பதிப்பாகும் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

பாலியல் வல்லுறவு செய்யப் பட்டதற்கு ஏன் அதிகப் படியான எதிர்ப்பை காட்ட வில்லை என்று நீதி மன்றத்தில் கேட்கப் பட்டதற்கு அப்பெண் பதிலளிக்கை யில், ''சில சமயங்களில் 'இல்லை' என்று சொல்வதே போதுமான தாகும். 
வழக்கமாக, நான் கூடுதலான பலத்தையும், வன் முறையையும் என் எதிர்ப்பை காட்ட பிரயோகம் செய்திருக்க வேண்டும். ஆனால் என்னைத் தாக்கியவர் மிகவும் பலம் வாய்ந்தவர் என்பதால் நான் அதிர்ச்சியால் உறைந்து போய் விட்டேன்'' என்று கூறினார்.

இப்பெண் சிறுவயதில் அவரது தந்தையால் பலமுறை பாலியல் துன்புறுத்த லுக்கு ஆளாக்கப் பட்டதாக விசாரணையின் போது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப் பட்டதாக கூறப்படும் பெண்ணுடன் தான் பாலியல் உறவில் ஈடுபட்ட தாக ஒப்புக் கொண்ட பிரதிவாதி, ஆனால், இருவரின் பரஸ்பர சம்மதத்துடன் அது நடந்ததாக தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)