உள்ளூரில் எங்கு போனாலும் வேட்டி தான் !

0
தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் உட்பட பலரும் உள்ளூரில் வேட்டி சட்டையில் வலம் வருகின்றனர்.
உள்ளூரில் வேட்டி




ஆனால் வெளிநாடு சென்று விட்டால் 'கோட்- சூட்'டிற்கு மாறி விடுகின்றனர். வட மாநிலங் களிலோ சில தலைவர்கள் வெளிநாட்டிற்கு பறந்தாலும் வேட்டியை விடுவதில்லை.
மத்திய அமைச்சராக இருந்த வரை வெங்கையா நாயுடு எப்போதும் வேட்டியில் தான் இருந்தார்.  வெளிநாடு போனாலும் வேட்டி தான் கட்டுவார். துணை ஜனாதிபதியான பிறகு வேட்டியை கடாசி விட்டு 'நேரு கோட்' போடுவார் என எதிர் பார்த்தனர். 

ஆனால் அதிகாரிகளின் அறிவுரை களையும் மீறி அவர் இப்போதும் வேட்டி தான் அணிகிறார். 

மத்திய அமைச்சர்களில் எப்போதும் வேட்டியில் தென்படுவர் ஒருவர் மட்டுமே. அவர் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். வட மாநில பாணியில் பஞ்ச கச்சம் ஸ்டைலில் இவர் வேட்டியை கட்டுவார்.
வெளிநாடு போனாலும் கோட்டிற்கு மாறிய தில்லை. இப்போது ராணுவ அமைச்சர் என்பதால் அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலையிலும் வேட்டி தான் கட்டுகிறார் ராஜ்நாத்.




அதிக குளிர் இருந்தால் மேலே நேரு ஜாக்கெட் அணிந்து கொள்கிறார். தற்போது தென் கொரியாவு க்கும் வேட்டி அணிந்து தான் சென்றுள்ளார். 
இப்படி இவர்கள் 'சிம்பிளாக' இருக்க அதிக 'கலர்புல்' ஆக இருப்பவர் நம்ம பிரதமர் மோடி தான். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு டிரஸ் என கலக்கிக் கொண்டிருக்கிறார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)