ஆளும் கட்சி எம்.எல்.ஏவுக்கு 500 ரூபாய் அபராதம் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

ஆளும் கட்சி எம்.எல்.ஏவுக்கு 500 ரூபாய் அபராதம் !

பேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...
நாடு முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தது. இதன்படி, போக்குவரத்து விதிமீறல் களுக்கு விதிக்கப்படும் அபராதம் மிக அதிகமாக உயர்த்தப் பட்டுள்ளது. 
எம்.எல்.ஏவுக்கு 500 ரூபாய் அபராதம்
அதாவது, ஹெல்மெட் இல்லை யென்றால் முன்னர் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அது ரூ.1000 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
இதே போல, பல விதிமீறல் களுக்கு அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப் பட்டது. ஹரியானா, ஒடிசா ஆகிய இரு மாநிலங்கள் தான் இதுவரை அதிக அபராதம் விதித்துள்ளது. 

இதுவரை, ஒடிசாவில் 88 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில், புவனேஷ்வர் மத்திய சட்டமன்றத் தொகுதி ஆளும் கட்சியான 
பிஜூ ஜனதா தள எம்.எல்.ஏ.வான அனந்த நாராயண் ஜேனா, போக்கு வரத்து விதிமுறை களை மீறி நோ பார்க்கிங் பகுதியில் வாகனத்தை நிறுத்தியதாக கூறப்படு கிறது. 
தகவலறிந்த புவனேஷ்வர் காவல் துணை ஆணையர் அனுப் சஹோ, எம்.எல்.ஏ அனந்த நாராய ணுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து, அதற்கான கட்டண ரசீதை வழங்கினார்.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close