குளத்தை கண்டுபிடித்து கொடுக்க அடித்த சுவரொட்டியால் பரபரப்பு !





குளத்தை கண்டுபிடித்து கொடுக்க அடித்த சுவரொட்டியால் பரபரப்பு !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
ஆட்கள் தேவை என்று கறம்பக்குடி பகுதில் ஒட்டப் பட்டுள்ள துண்டறிக்கை களைப் பார்த்த வேலை தேடும் இளைஞர்கள் வேகமாக சென்று படிக்க அதிர்ச்சியுடன் திரும்பு கின்றனர். 
சுவரொட்டியால் பரபரப்பு



அப்படி அந்த துண்டறி க்கையில் என்ன தான் உள்ளது? 

ஆட்கள் தேவை என்ற தலைப்பிட்ட துண்டறி க்கையில் கறம்பக்குடி தாலுகா குளந்திராண் பட்டு கிராமத்தில் சர்வே எண் 244 ல் உள்ள வெட்டுக் குளத்தை காணவில்லை. 
மத்திய புலனாய்வுத் துறை மூலமாக வாவது கண்டுபிடித்து மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர், 

கிராம நிரவாக அலுலர்கள் தேவை என்றும் இதற்கு கல்வி தகுதியாக சுய மரியாதை தன்னொழுக்கம் தேவை எனவும் கண்டிப்பாக பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது என்றும் உள்ளது.

இந்த துண்டறி க்கையை கருத்தாய்வுக் குழு வெளியிட் டுள்ளதாக கீழே உள்ளது. இதனால் தான் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறும் போது.. நிலத்தடி நீர் கீழே செல்கிறது. நீரை சேமிக்கும் ஆறு, குளம், வாரிகள் களவு போய் விட்டது. 
தினமும் அக்னி ஆற்றில் பொக்கலின் வைத்து டாரஸ் லாரிகளில் மணல் திருட்டு நடக்கிறது. வருவாய் முதல் காவல்துறை வரை தடுக்க வேண்டிய அதிகாரிகள் மாமூல் வாங்கிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள். 
சுவரொட்டி



லஞ்சமாக வாங்கும் பணத்தில் தண்ணீர் வாங்கி குடிக்கிறார்கள். ஆனால் பாவப்பட்ட ஏழை மக்கள் ஒரு குடம் தண்ணீருக் காக பல மணி நேரம் காத்திருக் கிறார்கள்.
இந்த நிலையில் தான் கொத்த மங்கலம், மாங்காடு, வடகாடு, கீரமங்கலம், பேராவூரணி, ஒட்டங்காடு, குருவிக் கரம்பை, நாடியம் இப்படி பல கிராமங் களில் இளைஞர்களே குளங்களை சீரமைக்கி றார்கள். அதற்கும் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை.

இந்த நிலையில கறம்பக்குடி தாலுகா குளந்திரான் பட்டு கிராமத்தில் புல எண் 244 ல் 3 ஹெக்டேர் 6 ஏக்கர்ஸ் பரப்பளவுள்ள வெட்டுக்குளம் வரை படத்தில் மட்டும் இருக்கு ஆனால் குளத்தை காணும். 
அதிகாரி களிடம் மனு கொடுத்து குளத்தை மீட்டுக் கொடுங்கள் என்று கேட்டும் பயனில்லை அதனால தான் இப்படி ஒரு சுவரொட்டி என்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி நீர்நிலை ஆக்கிர மிப்புகளை அகற்றுங்கள் என்று அதிகாரி களுக்கு பலமுறை உத்தர விட்டும் மாவட்டம் முழுவதும் இதே நிலை தான்..
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)