எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கும் போது 8 வயது சிறுமி உயிரிழப்பு ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019 தேர்தல் 2016

Flash News

எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கும் போது 8 வயது சிறுமி உயிரிழப்பு !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
எட்டு வயது சிறுமி ஸ்கேன் எடுக்க எம்.ஆர்.ஐ கருவிக்குள் அனுப்பிய போது உயிரிழந்த சம்பவம் பலரையும் பதைபதைக்க வைத்துள்ளது.
எம்.ஆர்.ஐ ஸ்கேன்
கான்பூரில் உள்ள லாலா லஜபதி ராய் அரசு மருத்துவமனை வளாகத்தின் உள்ளேயே தனியாரால் நடத்தி வரும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

காரணம் கேட்ட போது அதிக அளவிலான மயக்க மருந்து கொடுத்ததால் ஸ்கேன் செய்த போது சிறுமி இறந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மருத்துவ மனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் ஆர்.கே மயூர்யாவிடம் கேட்ட போது ”ஸ்கேன் மையத்திற்கு நோட்டிஸ் அனுப்பப் பட்டுள்ளது. 

அவர்களிட மிருந்து தக்க பதில் வந்த பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறி யுள்ளார். மையத்தின் தலைமை அதிகாரியான பூணம் பண்டேவிடம் கேட்டதற்கு “ அதிக அளவிலான மருந்து கொடுத்ததால் சிறுமி இறக்க வில்லை. 

அவருடைய உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் தான் கருவிக்குள் செல்லும் போது உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது எனக் கூறியுள்ளார். சிறுமி இதயப் பிரச்னைக் காரணமாகவே மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். 
மருத்துவர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கச் சொல்லி யுள்ளனர். மருத்துமனை வளாகத்திலேயே தனியாரால் நடத்தி வரும் மையத்தில் சிறுமியை அனுமதித் துள்ளனர். 
அப்போதும் சிறுமியின் தந்தை ஏற்கனவே குழந்தை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது இந்நிலையில் மயக்க மருந்து தருகிறீர்களே எனவும் கேள்வி எழுப்பியதாக சிறுமியின் தந்தை பத்திரிக்கை யாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

மூன்று மணி நேரம் கழித்து அதாவது 12.30pm மணி அளவில் சிறுமி இறந்து விட்டதாக தகவல் தெரிவித் துள்ளனர். உடனே சிறுமியைத் தூக்கிக் கொண்டு மருத்துவரிடம் சென்றுள்ளார். அவரும் சிறுமி இறந்ததை உறுதி செய்துள்ளார்.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause