படகு கவிழ்ந்த சம்பவம் - 3 மீனவர்களின் சடலங்கள் மீட்பு !

0
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த செப்.2 ஆம் தேதி திங்க ள்கிழமை புதிய படகு வாங்கு வதற்காக கடலூருக்கு சென்றனர்.
மீனவர்களின் சடலங்கள்



அங்கிருந்து போட்டியா எனப்படும் புதிய ரக நாட்டுப் படகை வாங்கிக் கொண்டு, மறுநாள் (செப்.3) செவ்வாய் கிழமை ராமேஸ்வரம் திரும்பி கொண்டிருந்தனர். 

படகில் நாகசாமி மகன் முனியாண்டி (47), ஆண்டி மகன் ரஞ்சித்குமார் (23), காந்தி மகன் மதன், ஆறுமுகம் மகன் இலங்கேஸ்வரன் (20), காந்தி மகன் தரைக்குடியான்,
ராம கிருஷ்ணன் மகன் காந்தி குமார் (23), முனியாண்டி மகன் செந்தில்குமார் (31), சண்முகம் மகன் முனீஸ்வரன் (24), ராஜ் மகன் உமாகாந்த் (19), ராஜா மகன் காளிதாஸ் (29) ஆகியோர் இருந்தனர்.

அப்போது புதுக்கோட்டை மாவட்டம் கடந்து உச்சிப்புளி அருகே நடுக்கடலில் சென்ற போது திடீரென படகு கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் படகில் இருந்த 10 மீனவர்களும் கடலுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடி யுள்ளனர்.

அதில் செந்தில் குமார், காளிதாஸ் என்ற இரண்டு மீனவர்களும் பிளாஸ்டிக் கேனை பிடித்துக் கொண்டு நடுக்கடலில் மிதந்துள்ளனர். 

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது படகில் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செந்தில்குமார், காளிதாஸ் ஆகிய 
படகில் சென்ற மீனவர்கள்



இரண்டு மீனவர் களையும் உயிரோடு மீட்டுக் கொண்டு வந்து சேது பாவாசத்திரம் கடலோர காவல்படை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். 

மீட்கப்பட்ட 2 மீனவர்களும் உறவினர் களிடம் ஒப்படைக்கப் பட்டனர். இதை யடுத்து சேது பாவாசத்திரம் கடலோர காவல்படை ஆய்வாளர் சுபா, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடலோர காவல்படை அலுவலக த்திற்கு தகவல் அளித்தார். 
புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம் மாவட்ட கடலோர காவல் படையினர், தொடர்ந்து 8 மீனவர் களையும் தேடி வந்தனர். மத்திய மீம்புக்குழுவினரும் ஹெலிக்காப்டர் மூலம் தேடி வந்தனர். 

மேலும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களிட மும் தேடும் பணிக்காக தகவல் தெரிவிக்கப் பட்டிருந்தது.

கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டிருந்தது. மீனவர்களின் உறவினர் களும் மல்லி பட்டினத்திற்கு வந்து விட்டனர். 

மேலும் மீனவர்களை மீட்க கோரி சக மீனவர்கள் சாலை மறியல் போராட்டங் களையும் நடத்தினார்கள்.

இந்த நிலையில் 5 ந் தேதி நடுக்கடலில் டீசல் கேன்களை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடி தத்தளித்துக் கொண்டிருந்த காளீஷ்வரன், சரக்கொடி யான், ரஞ்சித்குமார், முனீஷ்வரன் 

ஆகிய 4 மீனவ ர்களையும மீட்டு கடலுக் குள்ளேயே முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டு ஒரு படகு மூலம் மல்லி பட்டிணம் துறை முகத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டனர். 
உடல் நிலை மிகவும் பாதிக்கப் பட்டிருந்த 4 மீனவர்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக் காக சேர்த்தனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலோரக் காவல் படையினர்



தொடர்ந்து மற்ற 4 மீனவர் களை தேடும் பணியில் கடற்படையினர். கடலோரக் காவல் படையினர் சக மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டிருந்தனர். 

இந்த நிலையில் 7 ந் தேதி முத்துப் பேட்டை பகுதியில் கந்தகுமார், மதன் ஆகிய இரு மீனவர்களின் சடலங்களும் கண்டெடுக் கப்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி பிரேதப் பரிசோதனை செய்யப் பட்டது. 
தொடர்ந்து நடந்த தேடுதலில் இன்று 8 ந் தேதி மாலை உமா கண்ணன் என்ற மீனவரின் சடலம் கண்டெடுக் கப்பட்டு மல்லிபட்டினம் துறை முகத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

சடலம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் கடற் கரையிலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப் பட்டது.

மற்றொரு மீனவரான இலங்கேஸ்வரன் மட்டும் மீட்கப்பட வில்லை. அவரைத் தேடும் பணி தீவிர மடைந்துள்ள தாக கடலோர காவல் படையினர் கூறுகின்றனர். 
நடுக்கடலில் படகு கவிந்த விபத்தில் இதுவரை 6 மீனவர்கள் உயிருடனும், 3 மீனவர்கள் சடலமாகவும் மீட்கப் பட்டுள்ள நிலையில் ஒரு மீனவரை மீட்கப்படும் முயற்சியில் உள்ளதால் 

மீனவர்கள் மத்தியில் பரபரப்பாக உள்ளது. அதிகாரிகள் இன்னும் துரிதமாக செயல் பட்டிருந்தால் மீனவர்களை உயிருடன் மீட்டிருக் களாம் என்கிறார்கள் மீனவர்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)