விவசாயத்தை விட அதிக வருவாய் தந்த யூ-டியூப் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம்

Flash News

விவசாயத்தை விட அதிக வருவாய் தந்த யூ-டியூப் !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
அமெரிக்காவின் மின்னிசோட்டாவை சேர்ந்த ஷாச் ஜான்சன் என்பவர், சோளம் மற்றும் சோயாபீன்ஸ் விவசாயி. இவர் கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பிருந்து விவசாய வீடியோக்களை யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்து வருகிறார். 
விவசாயத்தை விட அதிக வருவாய் தந்த யூ-டியூப்அதற்கு நல்ல பலனாக தற்போது 3 லட்சம் பேர் அவரை பின் தொடர்கிறார்கள். 5 கோடி முறை அவரது வீடியோக்கள் பார்க்கப்பட்டு உள்ளன. இதனால் கடந்த ஆண்டில் அவர் விவசாய வருமானத்தை விட 5 மடங்கு வருவாய் யூ-டியூப் வழியே ஈட்டி உள்ளார்.

எப்படி மருந்து தெளிப்பது, வடிகால் அமைப்பது, விளைச்சலை பெருக்குவது என்பது சாதாரண வீடியோ பதிவுகள் பலருக்கும் பயனுள்ளதாக அமைவதால் இவருக்கு வருவாய் குவிந்துள்ளது.
இது போல மற்றொரு விவசாயி சுஷானே குக் என்பவர் 40 ஆயிரம் வாடிக்கை யாளர்களுடன் அதிக லாபம் ஈட்டி வருகிறார். அமெரிக்காவில் 59 சதவீதம் பேரும், உலகம் முழுவதும் கணிசமான வாடிக்கை யாளர்கள் யூ-டியூப் ரசிக்கிறார்கள். 

இதனால் இவர்களைப் போல பல்வேறு தொழில் செய்பவர்களும் தங்களை யூ-டியூப்பில் பிரபலப்படுத்தி லாபம் ஈட்டுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause