கோயிலில் பிச்சை எடுத்த ரஷ்ய பயணி - அனுப்பி வைத்த போலீஸ் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம்

Flash News

கோயிலில் பிச்சை எடுத்த ரஷ்ய பயணி - அனுப்பி வைத்த போலீஸ் !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் முருகன் கோவில் உள்ளது. ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளிலும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து முருகனை தரிசித்து செல்வது வழக்கம். 
கோயிலில் பிச்சை எடுத்த ரஷ்ய பயணிஇதனால், நேற்றும்(செவ்வாய்) கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது கோயில் வாசலில் வெளி நாட்டைச் சேர்ந்த ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தார்.

கோயில் வாயிலில் தரையில் அமர்ந்திருந்த அந்த வெளிநாட்டுப் பயணி, தனது தொப்பியை வைத்து பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தார். பக்தர்கள் அவரை ஆச்சர்யத் துடன் பார்த்துச் சென்றனர். 
அப்போது அந்த வாலிபர் “நான் இந்தியாவை சுற்றிப் பார்க்க வேண்டும். என்னிடம் பணம் இல்லை. பண உதவி செய்யுங்கள்” என சைகை மூலம் வருவோர் போவோரிடம் தெரிவித்தார்.

இதனை பார்த்த சில பக்தர்கள் அவரது தொப்பியில் பணம் போட்டனர். இது குறித்து பக்தர்கள் சிலர், பெரிய காஞ்சீபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதை யடுத்து, கோயிலுக்கு விரைந்து வந்த போலீசார், அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். 

அப்போது அவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த எவிக்மி என்பதும், அவரது ஏ.டி.எம். கார்டு முடக்கப் பட்டதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை என்பதும் தெரிய வந்தது. 
இதனால், பணத்தேவைக்காக கோயில் வாசலில் தான் பிச்சை எடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். எவிக்மி சொல்வது உண்மை தானா என்பதை கண்டறிய அவரது பாஸ்போர்ட், விசா ஆகிய வற்றை போலீசார் சரி பார்த்தனர். 

அவரிடம் அது தொடர்பான முறையான ஆவணங்கள் இருந்தது.  பின்பு போலீசார் அவரிடம் இது போன்று பிச்சை எடுக்கக் கூடாது என அறிவுரை கூறி சிறிதளவு பணம் கொடுத்தனர். 
தொடர்ந்து அவரை சென்னைக்கு ரயிலில் ஏற்றி விட்டு, தூதரக அதிகாரிகளை சந்திக்கும் படி அறிவுறுத்தி அனுப்பினர். கோயில் வாசலில் ரஷ்ய பயணி பிச்சை எடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause