அத்தி வரதர் வைக்கப்படும் குளம் - அறிக்கை அளிக்க கோர்ட் உத்தரவு ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம்

Flash News

அத்தி வரதர் வைக்கப்படும் குளம் - அறிக்கை அளிக்க கோர்ட் உத்தரவு !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
அத்திவரதர் சிலை வைக்கப்படும் அனந்தசரஸ் குளத்தை பராமரிக்க எதிர் காலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பாக அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
அத்தி வரதர் வைக்கப்படும் குளம்காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் 40 ஆண்டு களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன உற்சவம் ஜூலை 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 
அத்திவரதர் சிலை வைக்கப்பட்டு இருந்ததால் அனந்தசரஸ் குளத்தை தூர்வார முடிய வில்லை எனவும், தற்போது அத்திவரதர் தரிசனம் நடைபெறும் நிலையில், 

குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க உத்தர விடக்கோரி மாம்பலத்தைச் சேர்ந்த அசோகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, குளத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி அரசு வழக்கறிஞர்கள் எம்.மகாராஜா, எம். கார்த்திக்கேயன் ஆகியோருக்கு உத்தர விட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வழக்கறிஞர்கள் ஆணையர்கள் தாக்கல் செய்த அறிக்கையில், குளத்தில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப் பட்டுள்ளதா கவும், குளத்துக்கு யாரும் அனுமதிக்கப் படுவதில்லை எனவும் தெரிவிக்கப் பட்டிருந்தது. அத்திவரதர் சிலை வைக்கப் படுவதால் அனந்தசரஸ் குளத்தை இயந்திரங் களை பயன்ப டுத்தாமல் சுத்தப் படுத்தப் படுவதாகவும், குளத்தில் மீன்கள் வளர்க்கப்பட்டு, இயற்கையான முறையில் தண்ணீர் சுத்தப் படுத்தப் படுவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 
ஆறு மாதங்க ளுக்கு ஒரு முறை குளத்தை ஆய்வு செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுமதியளிக்க அறநிலையத் துறைக்கு ஒப்புதல் வழங்கி யுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்க பட்டது.

இதை யடுத்து, எதிர் காலத்தில் குளத்தை முறையாக பராமரிக்க எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பாக வரும் 14 ம் தேதி அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலைய துறைக்கு நீதிபதி ஆதிகேசவலு, உத்தர விட்டார்.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause