சேலத்தில் துணிக்கடை உரிமையாளரை வெட்டும் வீடியோ வைரல் !

0
சேலத்தில் துணிக் கடையில் புகுந்து அதன் உரிமையாளரை அரிவாளால் வெட்டும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. சேலம் நங்கவள்ளியில் ஒரு துணிக்கடை உள்ளது. 
துணிக்கடை உரிமையாளரை வெட்டும் வீடியோ



இந்த துணிக்கடை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் வேலுதங்க மணிக்குச் சொந்த மானதாகும். இங்கு கடந்த 16 ஆம் தேதி கடைக்குள் நுழைய இரு மர்ம நபர்கள், வேலு தங்க மணியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி விட்டனர். 

படுகாயங் களுடன் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்ட தங்கமணி தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி யுள்ளன. 
அதில் இருந்த மர்ம நபர்கள் அடையாளம் தெரிந்தது. எனினும் அவர்களை போலீஸார் இன்னும் கைது செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
உரிமையாளரை வெட்டும் சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த நிலையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், மணிகண்டன் என்பது தெரிய வந்தது. இதை யடுத்து இருவரையும் பிடிக்க தனிப்படை அமைத்த போலீஸார் அவர்களை தேடி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)