எச்சரிக்கை விடுக்கும் சவுதி.. ஈரான் தவறால் பெரும் பிரச்சனை !

0
இங்கிலாந்து எண்ணெய் கப்பல்களை ஈரான் சிறைபிடித்து இருப்பது நாளுக்கு நாள் பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது.
எச்சரிக்கை விடுக்கும் சவுதி.. ஈரான் தவறால் பெரும் பிரச்சனை !
இதனால் ஈரானுக்கு எதிராக அமெரிக்க ராணுவத்தை அனுப்புவோம் என்று சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகத் தான் மத்திய கிழக்கு நாடுகள் எண்ணெய் வர்த்தகம் செய்து வருகிறது. 

ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப் பாட்டில் வைத்து உள்ளது. இங்கு ஈரான் சமீப காலமாக நிறைய கட்டுப் பாடுகளை விதித்து இருக்கிறது. 

இந்த நிலையில் ஹோர்முஸ் ஜலசந்தியை இங்கிலாந்து எண்ணெய் கப்பல்கள் இரண்டு முறைகேடாக பயன்படுத்திய தாக ஈரான் மூலம் சிறை பிடிக்கப் பட்டுள்ளது. 

இது தான் தற்போது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி உள்ளது.

வழக்கம்

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்கள் உள்ளே செல்ல கூடாது. வெளியே மட்டுமே செல்ல வேண்டும். உள்ளே செல்ல வேறு வழி இருக்கிறது. அதை பயன்படுத்த வேண்டும். 
இது சர்வதேச விதி. இதை மீறினால் ஈரான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இங்கிலாந்து கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக உள்ளே வந்துள்ளது.

சிறை பிடிப்பு

இந்த நிலையில் ஹோர்முஸ் ஜலசந்தியில் இரண்டு இங்கிலாந்து கப்பல்களும் ஈரான் கப்பற்படை மூலம் சிறை பிடிக்கப்பட்டது. இங்கிலாந்து தரப்பை இது பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. 

இங்கிலாந்து பல முறை கேட்டும் ஈரான் இந்த இரண்டு கப்பல்களை விடுவிக்கும் எண்ணத்தில் இருப்பதாக தெரியவில்லை. இதனால் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஈரான்

இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித் துள்ளார். ''ஈரான் என்றால் வெறும் தொல்லைதான்'' என்று டிரம்ப் தெரிவித் துள்ளார். 
எச்சரிக்கை விடுக்கும் சவுதி.. ஈரான் தவறால் பெரும் பிரச்சனை !
அதே போல் சவுதியும் ஈரானுக்கு எதிராக கடுமையான கண்டனங் களை தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்க ராணுவங்களை அனுப்ப கூட தயார் என்று சவுதி தெரிவித்து உள்ளது.

தயார்

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ராணுவ படை ஏற்கனவே இரண்டு மாதங்களு க்கு முன்பே சவுதியில் குவிக்கப் பட்டுள்ளது. 
இதை தொடர்ந்து மேலும் அமெரிக்க ராணுவத்தை வரவேற்க தயார். அவர்களை ஈரானுக்கு எதிராக பயன்படுத்த தயார் என்று சவுதி கூறியுள்ளது. 

இங்கிலாந்து கப்பல்களை ஈரான் விடுவிக்க வில்லை என்றால் கசப்பான முடிவுகளை அந்நாடு சந்திக்கும் என்று சவுதி தெரிவித் துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)