தண்டவாளத்தில் தலை வைத்து காதல் ஜோடி தற்கொலை !

0
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்துள்ள ராமசந்திரா கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் மல்லேஷ் (வயது25). 
தண்டவாளத்தில் தலை வைத்து காதல் ஜோடி தற்கொலை
இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த கிருஷ்ணப்பா மகள் ஜோதி 21 என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

இந்தநிலையில் இவர்களது காதல் திருமணத்திற்கு இரு வீட்டாரின் பெற்றோர்களிடம் சம்மதம் கேட்டதாக தெரிகிறது. 

ஆனால் அதற்கு இருவரது வீட்டின் பெற்றோர்களும் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த காணப்பட்ட காதல் ஜோடி மல்லேஷ், ஜோதி இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் வீட்டில் 

இருந்து புறப்பட்டு கெலமங்கலம் அருகேயுள்ள பைரமங்கலம் ரெயில்வே கேட் அருகே வண்டியை நிறுத்தி யுள்ளனர்.

பின்னர் மல்லேஷ், ஜோதி தற்கொலை செய்ய முடிவு செய்து காருகொண்டபள்ளி ரெயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தனர். 

அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதியலில் மல்லேஷ், ஜோதி ஆகிய 2 பேரின் உடல் துண்டாகி கிடந்தது. 
இதனை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ஓசூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ரெயில் மோதி தண்டவாளத்தில் பிணமாக கிடந்த காதல் ஜோடி மல்லேஷ், ஜோதி ஆகிய 2 பேரில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)